धुनानं पङ्कौघं परमसुलभं कण्टककुलैः
विकासव्यासङ्गं विदधदपराधीनमनिशम् ।
नखेन्दुज्योत्स्नाभिर्विशदरुचि कामाक्षि नितराम्
असामान्यं मन्ये सरसिजमिदं ते पदयुगम् ॥ ६८॥
து⁴னானம் பங்கௌக⁴ம் பரம-ஸுலப⁴ம் கண்டக-குலை:
விகாஸ-வ்யாஸங்க³ம் வித³த⁴த³பராதீ⁴னமனிஶம் ।
நகே²ந்து³ ஜ்யோத்ஸ்னாபி⁴ர் விஶத³ ருசி காமாக்ஷி! நிதராம்
அஸாமான்யம்
மன்யே ஸரஸிஜமித³ம் தே பத³யுக³ம் ॥ 68॥
காமாக்ஷி! உன்னிரு கழல்களை தாமரைகள் என்று சொன்னாலும், அவை முற்றிலும்
மாறுபட்ட, ஒப்பில்லாதவையே என்று
நினைக்கிறேன். அவை பாவச் சேற்றில் உறைவதில்லை; மாறாக நீக்குகின்றன. முட்கூட்டங்களாம்
தீயவர்கள் அண்டவே முடியதாவை; யார் துணையுமில்லாமல் (சூரியனின்) எப்போதும் மலர்ந்திருப்பவை;
வெண்மையான நகங்களெனும் சந்திரனால் ஒளியுற்றவை! மாறாக, தாமரை மலரோ சேற்றில் பூக்கிறது;
தண்டிலும் முட்கள் உண்டு; சூரியனைக் கண்டே மலரும்; நிலவைக் கண்டு கூம்பிவிடும்.
உன்னீர்
கழலும் உறையாபா வச்சேற்றில்! ஊனமுட்கள்
உன்னை
யணுகவே ஒண்ணா! துணையாய் ஒருவரின்றி
உன்கழ
லூழ்க்கும்! உகிராம் நிலவால் ஒளியுறுமாம்!
உன்னடி
கட்கென்றும் ஒப்பில்லை காமாட்சீ ஒண்மரையே!
ஈர்கழல்- இருபாதம்; ஊன-தீய; ஊழ்க்கும்-மலரும்; உகிர்-நகம்; ஒண்மரை-
ஒளிமிக்க தாமரை;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam