நவம்பர் 16, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 58

समन्तात्कामाक्षि क्षततिमिरसन्तानसुभगान्
अनन्ताभिर्भाभिर्दिनमनु दिगन्तान्विरचयन्
अहन्ताया हन्ता मम जडिमदन्तावलहरिः
विभिन्तां सन्तापं तव चरणचिन्तामणिरसौ ५८॥

ஸமந்தாத் காமாக்ஷி க்ஷத திமிர ஸந்தான ஸுபகா³ன்
அனந்தாபிர் பாபிர் தி³னமனு தி³³ந்தான்விரசயன்
அஹந்தாயா ஹந்தா மம ஜடி³மத³ந்தாவலஹரி:
விபிந்தாம் ஸந்தாபம் தவ சரணசிந்தாமணிரஸௌ 58

காமாக்ஷீ! உன் எல்லையில்லா ஒளிக்கதிர்களால், ஒவ்வொரு நாளும், திக்கெலாம் சூழ்ந்த இருளகற்றி அழகு செய்வதும், அகந்தையை அழிப்பதும், அறியாமையெனும் ஆனையை அழிக்கும் அரிமாவானதுமான உன்றன் கழலெனும் சிந்தாமணி என்னுளத் தாபத்தை போக்கட்டுமே!

அலகில் ஒளியால் அனுதினம் திக்கெலாம் அல்லகற்றி
நலஞ்செய் தகந்தை நசிப்பதும் அஞ்ஞான நாகமதை
வலனரி மாவாய் மடிக்குமாம் வாரீச மாகழல்கள்
இலதென தாபம் இறுக்கட்டும் காமாட்சீ என்னுளத்தே!

அல்-இருள்; நலம்-அழகு; நாகம்-யானை; வலன் - வலிய; அரிமா-சிங்கம்; வாரீசம்-சிந்தாமணி; இறுக்கட்டும்-முறிக்கட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...