நவம்பர் 01, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 43

जगद्रक्षादक्षा नलिन रुचि शिक्षा पटुतरा
सुरैर्नम्या1 रम्या सततमभिगम्या बुधजनैः
द्वयी लीलालोला श्रुतिषु सुरपालादिमुकुटी-
तटीसीमाधामा तव जयाति2 कामाक्षि पदयोः ४३॥
समै: नम्या -ஸமை:; जननि -ஜனனி;

ஜக³த்³ ரக்ஷா த³க்ஷா ஜலஜருசிிக்ஷாபடுதரா
ஸுரை:1 நம்யா ரம்யா ஸததம் அபி³ம்யா பு³ஜனை:
த்³வயீ லீலா லோலா ்ருதிஷு ஸுர பாலாதி³ முகுடீ-
தடீ ஸீமாதாமா தவ ஜயதி2 காமாக்ஷி பத³யோ: 43

தாயே! காமாக்ஷி! உன்னிரு திருவடிகள், உலகைக் காக்கும் வல்லமயுள்ளதாயும், தாமரைகளுக்கு ஒளியைக் கற்பிப்பதாயும், தேவர்களால் வணங்கப்படுவதாயும், அழகுள்ளதாயும், ஞானிகளால் எப்போதும் பெறத்தக்கதாயும், வேதங்களில் விளையாட்டாய் உலவுவதாயும், இந்திரன் முதலானோரின் மகுட விளிம்புகளாயும் விளங்குகிறது.

உலகளி செய்யிரு உன்பாதங் கள்தாயே, ஒண்கமல
மலர்கொளி கற்பிக்கும்; வானோர் துதிப்பன; மஞ்சுளமாம்;
வலவறி வோர்க்கென்றும் வாய்ப்பதாம்; வேத மறையுலவும்;
புலவன் முடிவிளிம் பும்தங்கும் காமாட்சீ! பொற்பதமே!


அளிசெய்-காக்கின்ற; மஞ்சுளம்-அழகு; வலவறிவோர்- ஞானியர்; புலவன் -இந்திரன்;


1: समै: नम्या -ஸமை:; 2:जननि -ஜனனி; என்றும் பாடம் உண்டு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...