அக்டோபர் 31, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 42

मरुद्भिः संसेव्या सततमपि चाञ्चल्यरहिता
सदारुण्यं यान्ती परिणतिदरिद्राणसुषमा
गुणोत्कर्षान्माञ्जीरककलकलैस्तर्जनपटुः
प्रवालं कामाक्ष्याः परिहसति पादाब्जयुगली ४२॥

மருத்³பி: ஸம்ஸேவ்யா ஸததமபி சாஞ்சல்ய ரஹிதா
ஸதா³ருண்யம் யாந்தீ பரிணதி த³ரித்³ராண ஸுஷமா
கு³ணோத்கர்ஷான் மாஞ்ஜீர ககலகலைஸ்தர்ஜன படு:
ப்ரவாலம் காமாக்ஷ்யா: பரிஹஸதி பாதா³ப்³ஜ யுக³லீ 42

காமாக்ஷீயின் பாதாம்புயங்கள், காற்றின் தேவதைகளால் சேவை செய்யப்பட்டவை; அசையாத்தன்மை உடைத்தன; எப்போதும் செந்நிறம் பூத்தவை; மாறுதலில்லா ஏழ்மையடைந்த காந்தியுடையவை (மாற்றமில்லா அழகுடையவை); தங்களிடமிருந்து (தண்டைகளால்) வெளிவரும் கலீர் கலீர் எனும் ஒலிகொண்டு உசும்பக் கூடியன; இக்குணங்களால், இவை செந்துளிர்களையும் ஏளனம் செய்யக்கூடியனவாகவுள்ளன.

அம்மையின் திருவடிகள் தளிர்களைப் போன்றே அழகும், செம்மையும் கொண்டு, காற்றிலசைபவை; ஆனால் அவற்றின் செம்மையும், அழகும் குறைந்தழிபவை; அவை காற்றால் அலைகழிக்கப்படும்; எல்லாவற்றிலும் செந்துளிர்களை விட சிறந்தவையாதலின் அம்மையின் பாதாம்புயங்கள் அவற்றை பகடி செய்கின்றன.

அம்மைகா மாட்சியின் அம்புயப் பாதங்கள் ஆசுகத்தார்
தம்சேவை கொண்டவை; தாமசை யா;என்றும் தங்கிடுமாம்
செம்மையும் பூத்தவை; செவ்வியும் மாறா; சிலம்பொலிகள்

தம்மால் அதட்டும்; தளிர்களை ஏளனம் தாம்செயுமே!

ஆசுகத்தார் - காற்று தேவதைகள்; செம்மை-செந்நிறம்; செவ்வி-அழகு; 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...