दधानैः संसर्गं प्रकृतिमलिनैः षट्पदकुलैः
द्विजाधीशश्लाघाविधिषु विदधद्भिर्मुकुलताम् ।
रजोमिश्रैः पद्मैर्नियतमपि कामाक्षि पदयोः
विरोधस्ते युक्तो विषमशरवैरिप्रियतमे ॥ ७२॥
த³தா⁴னை: ஸம்ஸர்க³ம் ப்ரக்ருʼதி மலினை:
ஷட்பத³குலை:
த்³விஜா தீ⁴ஶஶ்லாகா⁴ விதி⁴ஷு வித³த⁴த்³பி⁴ர் முகுலதாம் ।
ரஜோ மிஶ்ரை: பத்³மைர் நியதமபி காமாக்ஷி! பத³யோ:
விரோத⁴ஸ் தே யுக்தோ விஷம ஶர வைரி ப்ரியதமே ॥ 72॥
ஐங்கணைக்கிழவன் மாரனின் வைரியின் மனத்துக்கினியாளே! காமாக்ஷீ! இயற்கையிலேயே
அழுக்குள்ள வண்டுகளின் சேர்க்கை உடையவையும், அந்தணர் தலைவராம் சந்திரனைப் போற்றுவதில்
மொட்டுக்களைப் போல விரும்பாதவையும், தூசி படிந்தவையுமான தாமரை மலர்களோடு உன்பாதங்களுக்கு
விரோதம் இருப்பது மெத்த சரியானதே!
மலர்க்கணை ஐந்துடை மாரனின் வைரி மனத்தினிதாய்
இலங்குகா மாட்சீ! இயல்பில் கசடாம் இரதமெலாம்
உலவிட, மொட்டுபோல் உம்பர் தலைமை ஒறுத்துதூசு
நிலவும் மரையோடு நின்பாத மாற்றம், நியாயமுற்றே!
கசடு-அழுக்கு; இரதம்-வண்டு; மொட்டு-மலர் மொக்கு;
உம்பர்-அந்தணர்; ஒறுத்து-வெறுத்து; மரை-தாமரை; மாற்றம்-பகை;