उपादिक्षद्दाक्ष्यं तव चरणनामा गुरुरसौ
मरालानां शङ्के मसृणगतिलालित्यसरणौ ।
अतस्ते निस्तन्द्रं नियतममुना सख्यपदवीं
प्रपन्नं पाथोजं प्रति दधति कामाक्षि कुतुकम् ॥ ७१॥
உபாதி³க்ஷத்³ தா³க்ஷ்யம்
தவ சரண நாமா கு³ருரஸௌ
மராலாநாம்
ஶங்கே மஸ்ருʼண க³தி லாலித்ய ஸரணௌ ।
அதஸ்தே
நிஸ்தந்த்³ரம் நியதமமுனா ஸக்²யபத³வீம்
ப்ரபன்னம்
பாதோ²ஜம் ப்ரதி த³த⁴தி காமாக்ஷி
குதுகம் ॥ 71॥
காமாக்ஷியே! உன்னுடைய பாதமென்னும் பெயருள்ள இந்த
குரு, அன்னங்களுக்கு அழகு மென்னடை நடையின் பாங்கைத் திறமையைப் புகட்டியுள்ளார் என்று
எண்ணுகிறேன். ஆதலினால் அந்த அன்னங்கள் இப்பாதங்களோடு ஒப்பிடத்தக்க தாமரை மலர்களோடு
நட்பு நிலையாகச் செய்துகொள்ள ஆர்வம்கொண்டுள்ளன.
உன்பாத மாம்குரு, ஓதிமங் கள்செய்யும் ஓவியமாம்
மென்னடைப் பாங்கினை மெச்சப் பயிற்றிடும் மெய்யறிந்தேன்;
அன்னநின் பாதம் அனையதாம் அம்புய ஆலமுடன்
நன்னட்பை அன்னங்கள் நாடும்கா மாட்சி நயந்திடுமே!
ஓதிமம்-அன்னங்கள்; ஓவியம்-அழகு; பாங்கு-வழி; அன்ன-அத்தகைய;
அனையதாம்-ஒப்பாய; அம்புய-தாமரை; ஆலமுடன்- மலரோடு; நயமுடன்-விரும்பி;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam