वषट्कुर्वन्माञ्जीरकलकलैः कर्मलहरी-
हवींषि प्रौद्दण्डं ज्वलति परमज्ञानदहने ।
महीयान्कामाक्षि स्फुटमहसि जोहोति सुधियां
मनोवेद्यां मातस्तव चरणयज्वा गिरिसुते ॥ ३५॥
வஷட்குர்வன்
மாஞ்ஜீர கலகலை: கர்ம லஹரீ-
ஹவீம்ஷி
ப்ரௌத்³த³ண்ட³ம் ஜ்வலதி பரமஜ்ஞான த³ஹனே ।
மஹீயான்
காமாக்ஷி ஸ்பு²டமஹஸி ஜோஹோதி ஸுதி⁴யாம்
மனோவேத்³யாம் மாதஸ்தவ சரணயஜ்வா கி³ரிஸுதே
॥ 35॥
மலைமகளே! தாயே! காமாக்ஷீ! மிகவும் உன்னதமுற்ற
உன் திருவடியாம் வேள்வி யாப்போன், சிறந்த ஞானவான்களின் மனமாம் ஓமகுண்டத்தில் (நித்தம்)
மிகுந்த ஒளியுடன் கொழுந்துவிட்டெரியும் உயர்ஞானம் என்னும் தழலில் அலையாக எழும் கருமங்களாம்
ஆகுதிகளைச் உன் சிலம்புகளின் ஒலியாம் “வஷட்” என்னும் மந்திர உச்சரிப்புடன் வேள்வித்தீயில்
இடுகிறான்.
மலையோன் மகள்தாய்கா மாட்சீ! உனதுயர் மாகழல்வேள்
தலையோன், அறிஞர்நெஞ் சாம்நித்தத் தில்கொழுந் தாயெழுந்து
கலையாகும் ஞானக் கனலில், அவிசாம் கருமமதன்
அலையை, சிலம்பொலி ஆமனு வோதி அழலிடுமே!
வேள்தலைசெய்வோர்-வேள்விகளைப் செய்துகொடுப்போர்;
நித்தம்-ஓமகுண்டம்; கலை-ஒளி, வெளிச்சம்; அவிசு-ஆகுதி; மனு-மந்திரம்; அழலிடுமே-ஓமத்தீயிலிடுமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam