भवानि द्रुह्येतां
भवनिबिडितेभ्यो मम मुहु-
स्तमोव्यामोहेभ्यस्तव
जननि कामाक्षि चरणौ ।
ययोर्लाक्षाबिन्दुस्फुरणधरणाद्
धुरर्जटिजटा-
कुटीरा शोणाङ्कं
वहति वपुरेणाङ्ककलिका ॥ १३॥
ப⁴வானி த்³ருஹ்யேதாம்
ப⁴வ நிபி³டி³தேப்⁴யோ மம முஹு-
ஸ்தமோ வ்யாமோ ஹேப்⁴யஸ் தவ ஜனனி! காமாக்ஷி! சரணௌ
।
யயோர் லாக்ஷாபி³ந்து³ ஸ்பு²ரண த⁴ரணாத்³ து⁴ர்ஜடி ஜடா-
குடீரா ஶோணாங்கம் வஹதி வபுரேணாங்ககலிகா ॥ 13॥
பவானி தாயே! காமாக்ஷி! எப்பாதங்களின்
செம்பஞ்சுச் சேற்றின் ஒரு துளி ஒளியை தரிப்பதால் பரமசிவனின் சடைமுடி என்னும் குடிலில்
வசிக்கும் சந்திரனின் பிறையானது, சிவப்பு மச்சமுள்ள உடலை அடைகிறதோ, உன்றனப் பாதங்கள்
அடிக்கடி பிறவிக்குக் காரணமாம் அவித்தையை நசிக்கட்டும்!
சேவடிச் செம்பஞ்சுச் சேற்றின் துளிஒளி சேருவதால்
கோவிடை யார்சடை கோயில் வசிக்கும் குறைநிலவில்
மேவும்செம் மச்சம்,மெய் மீது!கா மாட்சீயம் மேபவானி
தேவி! பிறவியைத் தீரவித் தையென்னில் தெற்றிநீயே!
சேவடி-சேவிக்கும்
பாதங்கள்; சேறு-குழம்பு; கோ-தலைவன்; விடையார்- விடைமேல் ஏறுஞ் சிவன்; கோயில்- சிவன்
வசிக்கும் குடில்; குறைநிலவு - பிறைநிலவு; தெற்று-இடறி; அவித்தை-அஞ்ஞானம்;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam