அக்டோபர் 01, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 12

तुलाकोटिद्वन्द्वक्कणितभणिताभीतिवचसोः
विनम्रं कामाक्षी विसृमरमहःपाटलितयोः ।
क्षणं विन्यासेन क्षपिततमसोर्मे ललितयोः
पुनीयान्मूर्धानं पुरहरपुरन्ध्री चरणयोः ॥ १२॥

துலாகோடி த்³வந்த்³க்வணித பணிதாபீதி வசஸோ:
வினம்ரம் காமாக்ஷீ விஸ்ருʼமர மஹ: பாடலிதயோ:
க்ஷணம் வின்யாஸேன க்ஷபித தமஸோர்மே லலிதயோ:
புனீயான் மூர்தானம் புரஹர புரந்த்ரீ சரணயோ: 12

புரமெரித்தாரின் மனையாளாம் காமாக்ஷீ, இருசிலம்புகளின் ஒலியால் அபயச் சொற்களைக் கூறிக்கொண்டு, பரவும் ஒளியால் சிவந்தவைகளாய், அஞ்ஞானத்தை (அவித்தை) அழிக்கின்ற அழகான பாதங்களில் சிறிது நேரம் வைப்பதால், வணங்குமென் தலையை அவை புனிதமாக்கட்டும்!

இனிதாய் ஒலித்து இருசிலம் பும்சொல்லும் இன்னபயம்;
கனிந்து பரவிடும், காமாட்சீ, செம்மைநின் காந்தியுமாம்;
நனியெழில் பாதம் நயந்தேனஞ் ஞானம் நசித்தெனைநீ
புனிதம்செய் சென்னி, புரமெரித் தார்தேவி புண்ணியளே!

அஞ்ஞானம்-அவித்தை; சென்னி-தலை; இன்னபயம்=இன் அபயம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...