प्रेमाम्बुराशिसततस्नपितानि चित्रं
कामाक्षि तावककटाक्षनिरीक्षणानि ।
सन्धुक्षयन्ति मुहुरिन्धनराशिरीत्या
मारद्रुहो मनसि मन्मथचित्रभानुम् ॥78॥
ப்ரேமாம்புராஶி ஸததஸ்னபிதானி சித்ரம்
காமாக்ஷி தாவக கடாக்ஷ நிரீக்ஷணானி |
ஸன்துக்ஷயன்தி முஹுரிந்தன ராஶி ரீத்யா
மாரத்ருஹோ மனஸி மன்மத சித்ரபானும் ||78||
காமாக்ஷீ! உனது கடைக்கண் பார்வைகள் அன்பு
கடலினில் எப்போதும் நீராட்டப்பட்டிருந்தும், விறகுக் குவியலைப்போல் காமவைரியின் நெஞ்சில்
காம நெருப்பை அடிக்கடி தூண்டுகின்றன; இது விந்தையல்லவா!
கடைக்கண்ணின் பார்வைகள், காமாட்சீ, அன்பாம் கடலதனில்
இடையில்நீ ராட்டில் இருந்தும், விறகின் இராசிகள்போல்,
படைமல ரோன்றன் பகைவர்க்கு காமத்தீ பற்றுதற்கு
இடையின்றி தூண்டுமாம்! ஈதே யொருவிந்தை என்பதுவே!
இராசி-குவியல்;
படைமலரோன்-மலர்படையோன் மன்மதன்;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam