मन्दस्मितैर्धवलिता मणिकुण्डलांशु-
सम्पर्कलोहितरुचिस्त्वदपाङ्गधारा ।
कामाक्षि मल्लिकुसुमैर्नवपल्लवैश्च
नीलोत्पलैश्च रचितेव विभाति माला ॥56॥
மந்த ஸ்மிதைர்தவலிதா மணிகுண்டலாம்ஶு-
ஸம்பர்க லோஹித ருசிஸ் த்வதபாங்க தாரா |
காமாக்ஷி மல்லி குஸுமைர் நவபல்லவைஶ்ச
நீலோத்பலைஶ்ச ரசிதேவ விபாதி மாலா ||56||
காமாக்ஷீ! உன் கடைக்கண்ணின் பெருக்கானது,
மென்னகையால் வெண்மையாயும், மணிக்குழைகளின் ஒளிக்குழைவால் சிவப்பாயும், இருப்பதால் மல்லிகை
மலர்கள், சிவந்த மாந்தளிர்கள், மற்றும் கருநெய்தல் மலர்கள் இவற்றால் தொடுக்கப்பட்ட
மாலைபோல் காணப்படுகிறதே!
உன்கடைக் கண்ணின் உவட்டது, காமாட்சீ! உன்னுடைய
புன்னகை யால்வெண்மை பூத்த நிறமுற்று பொன்மணிகள்
மின்குழை கள்செம்மை மேவிய தாலே விசகலியும்
மென்மாந் தளிரும் மிருதூற் பலமும் மிளிரணியே
உவட்டு - பெருக்கு;
செம்மை - சிவப்பு; விசகலி - மல்லிகை; மிருதூற்பலம் - கருநெய்தல்; அணி-மாலை;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam