नीलोत्पलेन मधुपेन च दृष्टिपातः
कामाक्षि तुल्य इति ते कथमामनन्ति ।
शैत्येन निन्दयति यदन्वहमिन्दुपादान्
पाथोरुहेण यदसौ कलहायते च ॥54॥
நீலோத்பலேன மதுபேன ச த்ருஷ்டிபாத:
காமாக்ஷி துல்ய இதி தே கதமாமனந்தி |
ஶைத்யேன நிந்தயதி யதன்வஹமின்து
பாதான்
பாதோருஹேண யதஸௌ கலஹாயதே ச ||54|
காமாக்ஷீ! உன்கடைக்கண் குளிர்ச்சியில்,
கரு நெய்தலுக்கு நண்பனான சந்திர கிரணங்களையும் இகழ்கிறது! வண்டுகளுக்கு நண்பனான தாமரை
மலரைவிடவும் அழகுகொண்டு, அதோடும் சண்டையிடுகிறதே தினமும்! எப்படி உன் கடைக்கண் பார்வை
கருநெய்தல் மலருக்கும், வண்டுக்கும் ஒப்பென்று கூறுகிறார்களோ?
கருநெய்தல் பூவும் கருவண்டும் ஒப்போநின் கண்கடைக்கு?
கருணைக் குளிர்வில் கடைக்கண் கலையோன் கதிரிகழும்
கருவண்டின் நட்பாம் கமலமும் தோற்கும் கவினுடைத்தாம்
இருந்தும் இரண்டும் இணையுன் விழிக்கெனல் எவ்விதமே?
கலையோன் - சந்திரன்;
கவின் - அழகு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam