शृङ्गारविभ्रमवती सुतरां सलज्जा
नासाग्रमौक्तिकरुचा कृतमन्दहासा ।
श्यामा कटाक्षसुषमा तव युक्तमेतत्
कामाक्षि चुम्बति दिगम्बरवक्त्रबिम्बम् ॥53॥
ஶ்ருங்கார விப்ரமவதீ ஸுதராம் ஸலஜ்ஜா
நாஸாக்ர மௌக்திகருசா க்ருத மந்தஹாஸா |
ஶ்யாமா கடாக்ஷ ஸுஷமா தவ யுக்தமேதத்
காமாக்ஷி சும்பதி திகம்பர வக்த்ர
பிம்பம் ||53|
ஹே காமாக்ஷி! உன் கடைக்கண் அழகாம் இளம்பெண்,
காதலூறி நாணத்தோடு கூடி, மூக்குத்தின் நுனியிருக்கிற முத்தின் ஒளியாள் மென்னகை செய்பவள்
போலிருந்து, திக்குகளையே ஆடையாக அணிந்த பரமசிவனுடைய முகபிம்பத்தை முத்தமிடுகிறாள்!
இது பொருத்தமே!
கடைக்கண் அழகிளங் கன்னியாள், காமாட்சீ, காதலூறி
அடைந்தனள் நாணம்; அணிந்தமூக் குத்தி அழகுமுத்தால்
அடைந்தனள் மென்நகை; அண்ணல்திக் காடை அணிந்தழகு
முடைந்த சிவனார் முகத்தைப் பொருத்தமாய் முத்திடுமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam