व्रीडनुवृत्तिरमणीकृतसाहचर्या
शैवालितां गलरुचा शशिशेखरस्य ।
कामाक्षि कान्तिसरसीं त्वदपाङ्गलक्ष्मीः
मन्दं समाश्रयति मज्जनखेलनाय ॥50॥
வ்ரீடனு வ்ருத்தி ரமணீக்ருத ஸாஹசர்யா
ஶைவாலிதாம் களருசா ஶஶிஶேகரஸ்ய |
காமாக்ஷி காந்திஸரஸீம் த்வதபாங்கலக்ஷ்மீ:
மந்தம் ஸமாஶ்ரயதி மஜ்ஜன கேலனாய ||50||
ஹே காமாக்ஷி! உனது கடைகண்ணாம் சீதேவி,
வெட்கம் என்னும் தோழி தன்னைத் தொடர, நீராடலுக்காக சந்திர சேகரரின் கழுத்தின் அழகினால்
பாசி படர்ந்ததுபோலுள்ள ஒளியாம் குளத்தை அடைகிறாளே!
காமாட்சீ நின்றன் கடைக்கண் திரும களாளிலச்சை
தாமது தோழிபோல் தன்னைத் தொடர்ந்திட, தாம்குளிக்க
வாமத் துனைகொள் மதிசேக ரர்தம் மணிகழுத்தின்
காமரால் பாசிகொள் காந்தி குளமதைக் கண்டனளே!
திருமகளாள் - ஸ்ரீதேவி,
இலச்சை - நாணம்; காமர் - அழகு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam