काषायमंशुकमिव प्रकटं दधानो
माणिक्यकुण्डलरुचिं ममताविरोधी ।
श्रुत्यन्तसीमनि रतः सुतरां चकास्ति
कामाक्षि तावककटाक्षयतीश्वरोஉसौ ॥51॥
காஷாயமம்ஶுகமிவ ப்ரகடம் ததானோ
மாணிக்ய குண்டலருசிம் மமதாவிரோதீ |
ஶ்ருத்யந்த ஸீமனி ரத: ஸுதராம் சகாஸ்தி
காமாக்ஷி தாவக கடாக்ஷ யதீஶ்வரோऽஸௌ ||51||
ஹே காமாக்ஷி! உன்னுடைய கடைக்கண்ணாம் தவபுங்கவர்
உனது மாணிக்கக் குழைகளுடைய சிவந்த ஒளியினால், காவியுடை
தரித்தவர்போல், மமதை கூடிய எண்ணத்துக்கு எதிரியாக இருந்துகொண்டு வேதமுடியாம் உபநிடதக்
கருத்தினில் ஈடுபட்டவராக மிகவும் விளங்குகிறார்!
உன்கடைக் கண்ணாம் உயர்தவ புங்கவர் உன்னுடைய
மின்னிடும் மாணிக்க மிஞ்சிகை கள்மீது மேவுமொளி
தன்னால் சிவந்த தவவுடை யார்போலே தற்செருக்கின்
ஒன்னாராய், காமாட்சீ ஒண்பொருள் வேதாந்தம் ஒன்றினாரே!
தவபுங்கவர் - தவத்திலுயர்ந்தோர்; மிஞ்சிகை
- குண்டலம், குழை; ஒன்னார் - எதிரி