ஏப்ரல் 03, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 33

कुडूमलितकुचकिशोरैः कुर्वाणैः काञ्चिदेशसौहार्दम्
कुङ्कुमशोणैर्निचितं कुशलपथं शम्भुसुकृतसम्भारैः 33

குட்மளித குச கிசோரை: குர்வாணை: காஞ்சிதேச சௌஹார்தம் |
குங்கும சோணைர் நிசிதம் குசல பதம் சம்புஸுக்ருத ஸம்பாரை: ||  (33)

சற்றே மலர்ந்த மொட்டைப் போன்ற இளம் தனங்களை உடையதும்காஞ்சீ தேசத்தில் பற்றுதலைக் கொண்டதும்குங்குமப் பூபோல சிவந்த நிறத்தை உடையதும்சிவபெருமானின் புண்ணியங்களின் சேர்க்கையாக இருப்பதுமான ஒன்றோடு நமது நலம் பிணைக்கப்பட்டிருக்கிறது.

சற்றே அலர்ந்த தளிர்மொட்டாம் போலும் தனமுடைத்தாள்;
பற்றே உடைத்தாளாம் பல்லவக் காஞ்சியில்; பாலவனார்
உற்றநல் லூழால் உவந்திடும் ஒன்றாம்; உரோகிதப்பூ
பெற்றசெவ் வண்ணளாம்; பெற்றி அவளின் பிணைப்பினாலே


உரோகிதம் - குங்குமம்; செந்நிறம்; பாலவன் - சிவன் (பால்வண்ணன்); பெற்றி - பேறு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...