संश्रितकाञ्चीदेशे सरसिजदौर्भाग्यजाग्रदुत्तंसे ।
संविन्मये विलीये सारस्वतपुरुषकारसाम्राज्ये ॥25॥
ஸம்ச்ரித காஞ்சீதேசே ஸரஸிஜ தௌர்பாக்ய ஜாக்ரத் உத்தம்ஸே |
ஸம்வின்மயே விலீயே ஸாரஸ்வத புருஷகார ஸாம்ராஜ்யே ||
(25)
அது காஞ்சீபுரத்தை தன்னிருப்பிடமாகக் கொண்டது; தாமரைப் பகைவனாம் சந்திரனைத் தன் தலையணியாகக் கொண்டது; சரசுவதியே தங்கி ஆட்சி புரிவதுபோன்ற வாக்கின் வலிமை கொண்டது; தன்னகத்தே பேரறிவைக் (ஞானத்தை) கொண்டது; அத்தகு மூர்த்தியினிடத்தில் நான் லயமடைந்திருக்கிறேன்.
தங்குமாம் காஞ்சீயில்; தாமரை யின்பகை சந்திரனோ
தங்குமாம் மேல்பூண் தலையணி யாக; சரசுவதி
தங்குமா ஆட்சிபோல் தாம்சொல் வலிமை தனதெனவே
தங்குமா ஞானத்தில் தான்தன் மயமாகித் தங்குவனே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam