1. சுமுகன் (இன்முகன்)
ஆனந்த
இன்முகம் அன்புடன் காட்டிடும் ஆனைமுகம்
வானவர்
போற்றிடு வாரணம் பூரண வாழ்வருளும்
ஏனமும்
ஊனமும் இன்றிட வேண்டுவோர் ஏற்றமுற
மோனத்
தொடுஞானம் மொய்ம்புகழ் ஈயும் முழுமுதலே
ஏனம் - குற்றம்
āṉanta iṉmukam aṉpuṭaṉ kāṭṭiṭum āṉaimukam
vāṉavar pōṟṟiṭu vāraṇam pūraṇa vāḻvaruḷum
ēṉamum ūṉamum iṉṟiṭa vēṇṭuvōr ēṟṟamuṟa
mōṉat toṭuñāṉam moympukaḻ īyum muḻumutalē
2. ஏகதந்தர் (ஒற்றைத்தந்தன்/ஒற்றைக்
கொம்பன்)
ஒடித்தொரு
கொம்பால் உயர்காவி யங்கீறு உன்னதனை
வடிவைத்
துறப்பினும் வாழ்வை பிறர்கீயும் வாரணனை
பிடிக்கப்
பதந்தரும் பேறாம்மொற் றைத்தந்தப் பிள்ளையினை
விடிவைத்
தருகின்ற வேழத்தை நாளும் விரைமனமே
கீறு - எழுது
oṭittoru
kompāl uyarkāvi yaṅkīṟu uṉṉataṉai
vaṭivait
tuṟappiṉum vāḻvai piṟarkīyum vāraṇaṉai
piṭikkap
patantarum pēṟāmmoṟ ṟaittantap piḷḷaiyiṉai
viṭivait
tarukiṉṟa vēḻattai nāḷum viraimaṉamē
3. கபிலன் (சிவந்த நிறத்தன்)
பொல்லாக்
கஜமுகன் பொன்றச்செங் காட்டில் பெருங்குருதி
நில்லாமல்
பாய்ந்துன் நிறமே சிவந்த நிறைபொருளோய்
நல்லவை
தந்தெம்மை நாளும் புரப்பாய் நலமளிக்கும்
வல்லபை
நாயகா வாழவை வாதாபி வாரணமே
pollāk
kajamukaṉ poṉṟacceṅ kāṭṭil peruṅkuruti
nillāmal
pāyntuṉ niṟamē civanta niṟaiporuḷōy
nallavai
tantemmai nāḷum purappāy nalamaḷikkum
vallapai
nāyakā vāḻavai vātāpi vāraṇamē
4. கஜகர்ணகன் ( யானைக் காதன்)
மதநீர்
மதுவிழை வண்டினம் வேண்டும் மலர்முகத்தோய்
இதமாய்
விரட்ட இருசெவி யாட்டும் இபமுகத்தோய்
முதமே
முருகோன் முதல்கஜ கர்ணா முழுமுதலோய்
நிதமும்
துதிப்போம் நிலைபெறச் செய்திடு நிர்மலனே
matanīr
matuviḻai vaṇṭiṉam vēṇṭum malarmukattōy
itamāy
viraṭṭa irucevi yāṭṭum ipamukattōy
mutamē
murukōṉ mutalkaja karṇā muḻumutalōy
nitamum
tutippōm nilaipeṟac ceytiṭu nirmalaṉē
5. லம்போதரன் (தொந்தி/பானை
வயிறன்)
பானை
வயிறனே பார்வதி மைந்தனே பற்றருத்தே
மோனம்
அளிக்கும் முழுமுதல் தேவனே மோதகனே
கோனாய்
மனமெனும் கோவிலில் வீற்றே குணமருளி
வானவர்
நாயக வாரண பூரண வாழ்வருளே
pāṉai
vayiṟaṉē pārvati maintaṉē paṟṟaruttē
mōṉam
aḷikkum muḻumutal tēvaṉē mōtakaṉē
kōṉāy
maṉameṉum kōvilil vīṟṟē kuṇamaruḷi
vāṉavar
nāyaka vāraṇa pūraṇa vāḻvaruḷē
6. விகடன் (வேடிக்கை விநோதன்)
விகடன்
விளையாடும் வேடிக்கை எல்லாம் வினைத்திருவாம்
அகத்தி
யரையேய்த்தோர் ஆற்றைப் பெருகக் அருளியவன்
செகத்தோர்
நலமுற சேர்த்தான் அரங்கனின் செவ்வடியை
உகந்தே
விகடத்தை ஊற்றாய் பொழிகின்ற ஒப்பிலானே
vikaṭaṉ
viḷaiyāṭum vēṭikkai ellām viṉaittiruvām
akatti
yaraiyēyttōr āṟṟaip perukak aruḷiyavaṉ
cekattōr
nalamuṟa cērttāṉ araṅkaṉiṉ cevvaṭiyai
ukantē
vikaṭattai ūṟṟāy poḻikiṉṟa oppilāṉ
7. விக்னராஜன் (இடையூற்றுக்கரசன்)
தடைகளை
நீக்கும் தயாளன் கணேசனைத் தஞ்சமென
மடையற்ற
வெள்ளமாய் மாதங்கம் நல்கும் மயலறுத்து
கிடைக்கும்
சிறப்புடன் கீழ்மையும் நீங்கியே கேண்மையுறும்
விடையேறி
செல்வனார் விக்னரா சன்தாள் விரைபவர்க்கே
thadaika'lai
:neekkum thayaa'lan ka'naesanaith thanjsamena
madaiya'r'ra
ve'l'lamaay maathangkam :nalkum mayala'ruththu
kidaikkum
si'rappudan keezhmaiyum :neengkiyae kae'nmaiyu'rum
vidaiyae'ri
selvanaar viknaraa santhaa'l viraipavarkkae
8. விநாயகன் (மேலாம் தலைவனிலான்)
தம்மினும்
மேலாம் தலைவனில் நாதனார் தண்ணளிக்கும்
பெம்மான்
விநாயகர் பேறெனக் குன்றாப் பெருமையுடன்
இம்மையும்
எப்போதும் ஈந்தே உளத்தில் இருந்திடுவான்
அம்மையும்
அப்பனும் அண்ட மெனவோதும் ஆண்டவனே
tammiṉum
mēlām talaivaṉil nātaṉār taṇṇaḷikkum
pemmāṉ
vināyakar pēṟeṉak kuṉṟāp perumaiyuṭaṉ
immaiyum
eppōtum īntē uḷattil iruntiṭuvāṉ
ammaiyum
appaṉum aṇṭa meṉavōtum āṇṭavaṉē
9.
தூமகேது (புகைக்கொடியோன்)
தூம
அசுரனாம் துட்டனைச் செற்றவர் தூமகேது
ஏமம்
தருவார் இபமுகர் என்றும் இதமளிப்பார்
நேமத்
தொடுநிதம் நெஞ்சில் இருத்தி நினைபவர்க்கு
தூமம்
இலாமல் துலக்கியே தீபமாய் தூண்டுவனே
tammiṉum
mēlām talaivaṉil nātaṉār taṇṇaḷikkum
pemmāṉ
vināyakar pēṟeṉak kuṉṟāp perumaiyuṭaṉ
immaiyum
eppōtum īntē uḷattil iruntiṭuvāṉ
ammaiyum
appaṉum aṇṭa meṉavōtum āṇṭavaṉē
10. பாலசந்திரன் (முன்கேசத்தில்
சந்திரனைச் சூடியவன்)
சந்திரன்
சூடும் சடையராம் ஈசனார் தம்மகனை
இந்தின்
இளம்பிறை ஏறும் சிகையன் இபமுகனை
வந்தித்
திருந்திட வாடியே உள்ளம் வதங்குவதில்
தந்திரம்
ஈதவன் தாளை அணிவோம் தலையினிலே
cantiraṉ
cūṭum caṭaiyarām īcaṉār tammakaṉai
intiṉ
iḷampiṟai ēṟum cikaiyaṉ ipamukaṉai
vantit
tiruntiṭa vāṭiyē uḷḷam vataṅkuvatil
tantiram
ītavaṉ tāḷai aṇivōm talaiyiṉilē
11 - பாலசந்திரன் (முன்கேசத்தில்
சந்திரனைச் சூடியவன்)
சந்திரன்
சூடும் சடையராம் ஈசனார் தம்மகனை
இந்தின்
இளம்பிறை ஏறும் சிகையன் இபமுகனை
வந்தித்
திருந்திட வாடியே உள்ளம் வதங்குவதில்
தந்திரம்
ஈதவன் தாளை அணிவோம் தலையினிலே
cantiraṉ
cūṭum caṭaiyarām īcaṉār tammakaṉai
intiṉ
iḷampiṟai ēṟum cikaiyaṉ ipamukaṉai
vantit
tiruntiṭa vāṭiyē uḷḷam vataṅkuvatil
tantiram
ītavaṉ tāḷai aṇivōm talaiyiṉilē
12 - கஜானனர் (கஜ ஆனன் -
கரி முகன்)
தும்பிக்கை
யானை துணையாம் கரிமுகத் தூமணியை
நம்புவோர்க்
கில்லை நசிவென்றும் நாளும் நலந்தருமாம்
அம்பிகைக்
கன்றை அழகனை ஆண்டருள் ஐங்கரனை
கொம்புடை
யானையை கும்பிடக் கொள்வோம் குவலயமே
tumpikkai
yāṉai tuṇaiyām karimukat tūmaṇiyai
nampuvōrk
killai naciveṉṟum nāḷum nalantarumām
ampikaik
kaṉṟai aḻakaṉai āṇṭaruḷ aiṅkaraṉai
kompuṭai
yāṉaiyai kumpiṭak koḷvōm kuvalayamē
13. வக்ரதுண்டர் (வளைந்த
துதிக்கையன்)
வளைந்த
துதிக்கை வளையாமல் காக்கும் வனப்புடைத்தாம்
களைந்து
குறைகள் கவலைகள் மாற்றும் கனிவுடைத்தாம்
திளைத்து
அவனில் தினமும் துதித்தால் திசைதொறுமே
இளைக்கா
புகழினை ஈட்டித் தருவான் இபமுகனே
vaḷainta
tutikkai vaḷaiyāmal kākkum vaṉappuṭaittām
kaḷaintu
kuṟaikaḷ kavalaikaḷ māṟṟum kaṉivuṭaittām
tiḷaittu
avaṉil tiṉamum tutittāl ticaitoṟumē
iḷaikkā
pukaḻiṉai īṭṭit taruvāṉ ipamukaṉē
14 - சூர்ப்பகர்ணர் (முறக்காதர்)
முறக்காதர்
பக்தர் முறைபுடைத் தேற்பார் முனைப்புடனே
நிறைவேற்று
வார்குறை நேர்மை யெனினுடன் நேர்ப்புடனே
இறையோன்
இபமுகன் ஈடில்லா தேவன் இகந்தனிலே
நிறைவாய்
மகிழ்வே நிமலன் தருவான் நிலைத்திடவே
புடைத்தல் - முறத்தால் புடைத்து
உமி, கல் போன்றவற்றை நீக்கல்; நேர்ப்பு
- நேர்த்தி
muṟakkātar
paktar muṟaipuṭait tēṟpār muṉaippuṭaṉē
niṟaivēṟṟu
vārkuṟai nērmai yeṉiṉuṭaṉ nērppuṭaṉē
iṟaiyōṉ
ipamukaṉ īṭillā tēvaṉ ikantaṉilē
niṟaivāi
makiḻvē nimalaṉ taruvāṉ nilaittiṭavē
15 - ஹேரம்பர் (ஐம்முகர்)
அஞ்சுதல்
போக்கிடும் ஐம்முக மூர்த்தியாய் ஆனவுரு
குஞ்சரக்
கோவாம் குமரன் தமையனை கும்பிடவே
நெஞ்சம்
கனிந்தே நிகளம் துகளாய் நெறிபடவும்
வஞ்ச
மிலாமல் வளமிகு வாழ்வை வழங்குவனே
añcutal
pōkkiṭum aimmuka mūrttiyāy āṉavuru
kuñcarak
kōvām kumaraṉ tamaiyaṉai kumpiṭavē
neñcam
kaṉintē nikaḷam tukaḷāy neṟipaṭavum
vañca
milāmal vaḷamiku vāḻvai vaḻaṅkuvaṉē
16 - ஸ்கந்தபூர்வஜர் (கந்தனுக்கு
மூத்தோன்)
கந்தனின்
மூத்தவன் காருண்ய மூர்த்தி கணபதியை
சொந்த
முடனே தொழுவார் தமக்கில்லை சோர்வெதுவும்
தந்தி
முகனவன் தாளினைப் பற்றினால் தாங்கிநமை
அந்த
மிலாமல் அருள்புரிந் தாள்வான் அனுதினமே
kantaṉiṉ
mūttavaṉ kāruṇya mūrtti kaṇapatiyai
conta
muṭaṉē toḻuvār tamakkillai cōrvetuvum
tanti
mukaṉavaṉ tāḷiṉaip paṟṟiṉāl tāṅkinamai
anta milāmal aruḷpurin tāḷvāṉ aṉutiṉamē
anta milāmal aruḷpurin tāḷvāṉ aṉutiṉamē
கவிப்பயன்:
கட்டளை யொன்று கணபதி யிட்டான் கவியெழுத
கட்டளை யாமிக் கலித்துறை நாளும் கருத்துடனீர்
எட்டும் இனிதாய் இகத்தில் துதித்தால் இளகியுடன்
மட்டிலா மாண்பும் மகிழ்வும் தருவான் மறைமுதலே
kavippayaṉ:
kaṭṭaḷai yoṉṟu kaṇapati yiṭṭāṉ kaviyeḻuta
kaṭṭaḷai yāmik kalittuṟai nāḷum karuttuṭaṉīr
eṭṭum iṉitāy ikattil tutittāl iḷakiyuṭaṉ
maṭṭilā māṇpum makiḻvum taruvāṉ maṟaimutalē
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam