டிசம்பர் 28, 2015

ஷோடஸ கணபதி 7 - விக்னராஜன் (இடையூற்றுக்கரசன்)

“விக்ந ராஜர்” பற்றி மஹா பெரியாவாளின் அருள்வாக்கு - கட்டளைக் கலித்துறைக் கவிதை.

அடுத்த பேர் விக்ந ராஜர். அதாவது விக்நேச்வரர். விக்ந ஈச்வரரேதான் வித்நராஜா. ஈச்வரன் ராஜாவுக்கு ரொம்ப மேலே என்று தோன்றும். ஆனாலும் ரூட் மீனிங் பார்த்தால் ஈச்வரனும் ராஜா செய்கிறதைச் செய்பவன்தான். ஈச் என்கிற தாதுவுக்கு ஆட்சி பண்ணுவது என்றே அர்த்தம். ஆட்சி பண்ணுகிறவன் ஈச்வரன். ஸ்வாமி பெயர்களில் ராஜா, ஈச்வரன், நாதன் என்கிற வார்த்தைகள் ஒரே அர்த்தத்தில்தான் வரும். நடராஜா என்ற பேரையே நடேசன், நடேச்வரன் என்றும் சொல்கிறோம். ரங்கராஜா என்ற பேரையே ரங்கநாதன், ரங்கேசன் என்றும் சொல்கிறோம். திருநாவுக்கு அரசர் என்பதையே வாக்-ஈசர் என்கிறோம். அப்படி விக்ந ராஜா என்றாலும் விக்நேச்வரர் என்றாலும் ஒருத்தர்தான்.

பிள்ளையாருக்கு இருக்கப்பட்ட ப்ரத்யேகமான அதிகாரத்தைக் காட்டுவது விக்நராஜா என்ற பேர்தான். அவர் ப்ரத்யேகமாக எதற்காக ஏற்பட்ட ஸ்வாமி?ப்ரம்மா ஸ்ருஷ்டிக்கு;விஷ்ணு ஸ்திதிக்கு:ருத்ரன் லயத்துக்கு;துர்க்கை வெற்றிக்கு:லக்ஷ்மி செல்வத்திற்கு;ஸரஸ்வதி படிப்புக்கு;தன்வந்தரி வியாதி நிவாரணத்திற்கு என்றெல்லாம் பரமேச்வரனின் ப்ரபஞ்ச சர்க்கார்களில் ஒவ்வொருத்தருக்கு ஒரு ஆபீஸ் இருக்கிற மாதிரி, பிள்ளையாருடை¬- -ய ஆபீஸ் என்ன?விக்னங்களைப் போக்குவதுதான். எடுத்த காரியம் எதுவானாலும் அதில் விக்னம் - இடையூறு - உண்டாக்காமலிருக்கவே எடுத்த எடுப்பில் அவரைத் தொழுகிறோம். விக்ன நீக்கத்திற்கென்றே ஏகப் பரம்பொருள் எடுத்துக்கொண்ட ரூபம்தான் விக்நேச்வரர் அல்லது விக்நராஜா.

விக்னத்துக்கு ஈச்வரர், ராஜா என்றால் விக்னங்களை உண்டாக்குவதில் தலைவர் என்று அர்த்தம் பண்ணிக் கொள்ளக்கூடாது. விக்னங்களை அடக்கி அழிப்பதால் அவர் விக்ன ராஜாவாக இருக்கிறார். ஒரு ராஜாவுக்கு முக்யமான வேலை சத்ருக்களை அடக்கி வைப்பது. அப்படி விக்னங்களை அடக்கி வைக்கும் விக்ன ராஜா அவர்.

ஆராய்ச்சிக்காரர்கள் ஆதியில் உக்ர தேவதையாகப் பிள்ளையார் இருந்தபோது அவர்தான் விக்னங்களை உண்டு பண்ணுபவராக இருந்தாரென்றும், அதனால்தான் விக்நேச்வரர் என்ற பேர் ஏற்பட்டதென்றும், அப்புறம் ஸெளம்ய மூர்த்தியாக அவரை வழிபட ஆரம்பித்த பிறகும் அந்தப் பெயர் நீடித்து விட்டதென்றும் சொல்கிறார்கள்.

விக்னம் செய்வதும் உயர் நோக்கத்திலேயே !

அங்கங்கே அவர் விக்னமும் கொஞ்சம் உண்டாக்கித்தான் இருக்கிறார். பரமசிவனே திரிபுர ஸம்ஹாரத்திற்குப் புறப்படும்போது தம்மை நினைக்காமல் புறப்பட்டதால் அவருடைய ரதத்தின் அச்சு முறிந்து போகும்படிப் பண்ணியிருக்கிறார். ஆனால் இதெல்லாமும், பரமேச்வரனேயானாலும் அவருங்கூட லோக நிர்வாகத்தில் மற்ற தெய்வங்களுக்கு இருக்கிற அதிகாரத்தை மதித்து அதற்கு கீழ்படிந்து காட்டுவதுதான் முறை என்று புரிய வைப்பதற்குத்தானேயழிய, கெடுதல் பண்ண வேண்டும் என்பதற்காகவே கெடுப்பதல்ல. சட்டத்திற்கு Obey பண்ணனும். தனி ஆஸாமியைவிட - அவன் ஸாமியாகவே இருந்தால்கூட - சட்டந்தான் பெரிது என்று புரியச் செய்வதற்கும், அடங்கிப் போகும் அடக்கக்குணம் எவருக்கும் இருக்க வேண்டும் என்று பாடம் கற்பிப்பதற்காகவுந்தான் அவர் எப்போதாகிலும் விக்னம் உண்டாக்குவது. அதனால் அப்போதைக்கு பாதிக்கப்பட்டவர்கள் முடிவிலே நாசமானதாகக் கதையே கிடையாது. ஏனென்றால் விக்னத்தையே உண்டாக்கிய விக்நேச்வரரே தத்-த்வாரா (அதன் வழியாக) அதனால் பாதிக்கப்பட்டவருக்கு, நாம் பராசக்தியின் ஆட்சியில் விக்ன நிவாரணத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகார புருஷரை மறந்து நாமே ஸாதித்துவிட முடியும் எனறு கார்யத்தில் இறங்கியதால்தான் இப்படி உபத்திரவம் உண்டாகியிருக்கிறது என்ற நல்லறிவையும் ஊட்டி, அவர் அடக்கத்தோடு ப்ரார்த்தனை பண்ணும்படிச் செய்து விடுவார். அப்புறம் ஒட்டிக்கு இரட்டியாக நிரம்ப அநுக்ரஹம் புரிந்து விடுவார். அவர்தான் விக்நராஜா.

ஷோடஸ கணபதி 7 - விக்னராஜன் (இடையூற்றுக்கரசன்)

தடைகளை நீக்கும் தயாளன் கணேசனைத் தஞ்சமென
மடையற்ற வெள்ளமாய் மாதங்கம் நல்கும் மயலறுத்து 
கிடைக்கும் சிறப்புடன் கீழ்மையும் நீங்கியே கேண்மையுறும்
விடையேறி செல்வனார் விக்னரா சன்தாள் விரைபவர்க்கே

thadaika'lai :neekkum thayaa'lan ka'naesanaith thanjsamena
madaiya'r'ra ve'l'lamaay maathangkam :nalkum mayala'ruththu 
kidaikkum si'rappudan keezhmaiyum :neengkiyae kae'nmaiyu'rum

vidaiyae'ri selvanaar viknaraa santhaa'l viraipavarkkae

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...