டிசம்பர் 11, 2015

குறளின் குரல் - 1331

11th Dec, 2015

தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் 

அகறலின் ஆங்கொன் றுடைத்து.

                            (குறள் 1325: ஊடலுவகை அதிகாரம்)

தவறிலர் ஆயினும் - காதலன் தவறுகள் ஏதும் இல்லாதவன் ஆயினும்
தாம் வீழ்வார் - தாம் விரும்புகின்ற
மென்றோள் 
- காதலியின் மெல்லிய தோள்களில்
அகறலின் - (அவளுடைய ஊடலால்) சாய்ந்து முயங்குதலை நீங்குதலிலும்
ஆங்கு ஒன்று உடைத்து - அங்கே ஒரு இன்பம் இருக்கிறது.

இக்குறள் தலைவன் கூற்றாகச் சொல்லப்படுவது. தம்மேல் தவறேதும் இல்லையாயினும், தாம் விரும்புகின்ற தம் காதலியின் மெல்லிய தோள்களில் சாய்ந்து முயங்கியிருத்தலை அவள் கொண்ட ஊடலால் நீங்குவதிலும் ஒரு இன்பம் உள்ளது, என்கிறான் காதற்தலைவன். தலைவனே கூட காதலி தன்னோடு ஊடல் கொள்வதைத்தான் விரும்புகிறான் போலிருக்கிறது, ஏனெனில் ஊடலுக்குப் பின்வரும் கூடலில்தானே இன்பம் மிக்கிருக்கிறது.

Transliteration:

Tavarilar Ayinum tAmvIzhvAr menROL
agaRalin Angon RuDaittu

Tavarilar Ayinum – though the lover has no fault of his
tAm vIzhvAr – for the woman he has fallen for
menROL – from her slender shoulders
agaRalin – even in being away
Ang(u) onR(u) uDaittu – there is a pleasure (thinking of ensuing pleasure)

This verse is said from the man in love; though he has no fault of his own for the maiden to be estranged in love-quarrel, and he has to be away from the nearness of his lovers’ slender shoulders, he knows there is a pleasure in that. Probably he thinks and knows of the ensuing union with his maiden and it is more than the union while in cordial terms.

“Though free of fault, and be away from his maidens’ shoulders, slender
 there is a pleasure for him in that, thinking of ensuing union, his wonder!”

இன்றெனது குறள்:

தங்குற்றம் இல்லெனினும் காதலியின் தோள்நீங்கி
அங்குறும் ஊடலுமின் பாம்

thangkuRRam illeninum kAdaliyin tOLnIngi
anguRum Udalumin bAm

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...