12th Dec, 2015
உணலினும்
உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின்
ஊடல் இனிது.
(குறள் 1326:
ஊடலுவகை அதிகாரம்)
உணலினும் - ஒருவர் உண்பதிலும்
உண்டது அறல் இனிது - அவர் ஏற்கனவே உண்டதை செரித்தலே இனிதாம்
காமம் புணர்தலின் - அதேபோல் காமத்தால் காதலியோடு கூடுவதிலும்
ஊடல் இனிது - அதற்குமுன் ஊடுதலே இனிதாம்.
ஒருவர்
அறுசுவை உண்டி உண்பதில் இன்பம் உண்மையாக இல்லை. ஏற்கனவே உண்டதை முற்றிலுமாக செரிப்பதில்தான்
இன்பமே இருக்கிறது. செரிமானம் சரி வர இல்லையெனில், மேலும் மேலும் உண்பதால் என்ன பயன்?
அது துன்பமே தவிர இன்பம் இல்லை. அதேபோல்தான், ஊடல் என்பது முதலில் இல்லையெனில், கூடலில்
இன்பம் இராது என்கிறார் வள்ளுவர். ஊடலுக்குபின் வரும் கூடலே இன்பம் தருவது என்று ஊடலின்
உவகையை வலியுறுத்துகிறார் இக்குறளில். குறளின் போக்கிலேயே ஒரு மாற்றுக்குறளும், ‘இதுவே
முறை’ என்ற முறையில் மற்றொரு குறளும் எழுதப்பட்டுள்ளன.
Transliteration:
uNalinum uNDadu aRalinidu kAmam
puNardalin UDal inidu:
uNalinum - More than eating
uNDadu aRal inidu –
digesting what is already eaten is pleasurable
kAmam puNardalin –
Likewise, even more than in union with the lover
UDal inidu – love-quarrel is
pleasurable (as it yields more pleasure in ensuing union)
In eating feast there is no real
delight. It is truly delightful in digesting what has been eaten already
completely. If the digestion is not good, what is the use in stuffing the
stomach more? It is highly unhealthy and painful eventually. Likewise, if there
is no love-quarrel, there is no delight in subsequent union. The pleasurable
union is only delightful, when it is after a love-fight. Saying this, vaLLuvar
emphasizes the delight of love-quarrel, in this verse.
“It is more delightful to digest food than to
keep eating more
Like
wise love-quarrel is more delightful, than union before”
இன்றெனது குறள்(கள்):
செரித்தலே உண்பதிலும் இன்பமாம்போல் ஊடல்
புரிதலே
கூடலிலும் இன்பு
serittalE uNbadilum inbamAmpOl UDal
puridalE kUDalilum inbu
உணவுக்கு முன்செரித்தல் நன்றாம்போல் ஊடல்
புணர்வுக்கு முன்னினிது காண்
uNavukku munserittal nanRAmpOl UDal
puNarvuku munninidu kAN
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam