நவம்பர் 22, 2015

குறளின் குரல் - 1312

22nd Nov, 2015

துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.

                           (குறள் 1306: புலவி அதிகாரம்)

துனியும் - கோபமும்
புலவியும் - ஊடலும்
இல்லாயின் - இல்லாமலிருந்தாலே
காமம் - கலவியின்பம்
கனியும் - நல்ல முதிர்ந்த கனியும்
கருக்காயும் - இளம் பிஞ்சும்
அற்று - போலாம்

கோபமும், ஊடலும் இல்லாமலிருந்தால், காதலால் வரும் கலவியின்பம் முதிர்ந்த கனிபோன்று அழுகிப்போயும், இளம்பிஞ்சுக் காயைப்போல் துவர்ப்பாயும் இருக்கும் எனவே இவ்விரண்டுமே கலவிக்குத் தேவையென்று கூறுகிறார் வள்ளுவர் இக்குறளில்

Transliteration:

Tuniyum pulaviyum illAyin kAmam
Kaniyum karukkAyum aRRu

Tuniyum – if both anger (feign)
pulaviyum – and sulking
illAyin – are not there
kAmam – the conjugal pleasure would
Kaniyum – extremely ripe fruit (probably rotten)
karukkAyum – the raw fruit (which astringency)
aRRu – feel like

If the feign anger and the sulking are missing, then the conjugal pleasure would feel like the taste of rotten fruit astringency of unripe fruit; hence both are required in some measure for the conjugal relationship to taste better, say VaLLuvar in this verse.

“Without the appropriate mix of anger and the sulking, love
  would feel like the rotten or a raw fruit, not treasure trove"

இன்றெனது குறள்:

கனிந்தபழம் பிஞ்சுக்காய் போன்றே கலவி
முனிவொடு கூடலின் றேல்

kanidapazham pinjukkAi pOnRE kalavi
munivoDu kUDalin REl

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...