21st Nov, 2015
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து.
(குறள்
1305: புலவி
அதிகாரம்)
நலத்தகை - நல்ல பண்புகளை உடைத்த
நல்லவர்க்கு - நல்ல காதற் தலைவனுக்கு
ஏஎர் - சிறப்பும்
அழகும் தருவது
புலத்தகை - ஊடல் கொள்ளும் பண்பு
பூஅன்ன கண்ணார் - மலர்விழிகொண்ட காதலியர்
அகத்து - உளத்து இருப்பது.
மலர்விழி மங்கையரின் உள்ளத்தில்
ஊடல் தோன்ற இருப்பதே, நல்ல பண்புகளையே உடைய காதற் தலைவனுக்கும் சிறப்பும் அழகுமாம்.
இது எவ்வாறு என்று தோன்றுமல்லவா? காதற்தலைவன் நல்லவந்தான் . ஆயினும் அவனுக்கும் கூடலின்
இன்பம் சிறக்க வேண்டுமே! அதற்காகவாவது அவனுடைய
காதல் மங்கையின் உள்ளத்தில் ஊடல் ஊடியிருக்கவேண்டும் என்கிறார். ஊடலில்லையேல் உறவும்
கூடலும் இனிப்பதில்லையே!
Transliteration:
Nalattagai nallavarkku Eer pulattagai
pUanna kaNNA agattu
Nalattagai – Having good
virtues
nallavarkku
– to the man of good stead
Eer – what is worthy
is
Pulattagai – the sullenness,
at least pretense petulance
pUanna kaNNA
– from the maiden of flowery eyes
agattu – in their
hearts.
A little petulance in the
hearts of the maiden of flower eyes is good and worthy for her beloved who is
of good nature. Why would sulking be good? - is a question that comes ot
everyones’ mind! Yes, her beloved is many of virtues and of good stead; but for
him, if the union of and embrace of his maiden has to be excellent, this would
be required - just like adding a little spice to make the food tasty! Without
such small and short lived love quarrels, their togetherness would not feel
better!
“Even the pretense sulking in the heart of the
maiden is good
even for her
beloved man of good virtues, like spice to food”
இன்றெனது
குறள்:
மலர்விழி
மாதர் உளத்தூடல் நன்றாம்
நலப்பண்பு
மிக்கவாட வர்க்கு
malarvizhi mAdar uLAttUDal nanRAm
nalppaNbu mikkavADa varkku
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam