12th Nov, 2015
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு.
(குறள் 1296:
நெஞ்சொடுபுலத்தல் அதிகாரம்)
தனியே இருந்து நினைத்தக்கால் - நான் தனித்து இருந்து அவர் பிரிந்ததை நினைக்கையில்
என்னைத்து - ஏனோ?
இனிய இருந்தது - இனிதாய் உணர்ந்திருந்தது
என் நெஞ்சு - என்னுடைய் உள்ளம்?
இக்குறளைப் பொருத்தவரை, “தினிய” என்ற சொல்லை “தின்னல்” என்று பொருள்கொண்டு எல்லா உரையாசிரியர்களும் பொருள் செய்துள்ளது
வியப்பாயுள்ளது. மீண்டும் மந்தை விந்தை நடந்துள்ள குறள். தினிய
என்ற சொல்லே எங்குமே கையாளப்படாதது மட்டுமின்றி, அகராதிகளில் கூட அச்சொல் இல்லை. தினிய என்பது “து + இனிய” என்றாகி, “து”
முற்சொல்லோடு சேரும். எடுத்துக்காட்டாக, “அனைத் தினிய” என்பது “அனைத்து இனிய” என்றாவதுபோல்.
இக்குறளிலும் என்னைத்து + இனிய என்பதே என்னைத் தினிய என்றாகியது.
அதிகாரத்தின்
மையக்கருத்து, தலைவி தன் கருத்துக்கு மாறாக செயலாற்றும் தன் நெஞ்சை சினத்தலாம். அவ்வாறு
நோக்கின், அவள் இவ்வாறு தன் நெஞ்சம் அவனை நினந்து இன்புறுவதை நொந்து கொள்வதாகப் பொருள்
அமைவது புரியும் - “நான் தனியே இருந்து அவர் பிரிந்ததை நினைக்கையில் என்னுடைய உள்ளம்
ஏதற்காக இனியதாய் உணரவேண்டும்?” அவர் என்னைப் பிரிந்து சென்றதை நினைந்து என் கருத்துக்கு
இயந்து ஊடத்தகனே வேண்டும் என்று நினைக்கிறாள் தலைவி.
மணக்குடவர் தொடங்கி, பரிமேலழகர் மற்றும் தற்கால
உரையாசிரியர்கள் வரை, “நான் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பதுபோல்
துன்பம் தந்தது” என்று தலைவி மருகுவதாக உரை செய்துள்ளனர். இது தினிய என்பதைத் தவறாகப்
பொருள் கொண்டதாலேயே என்பது தெளிவு.
Transliteration:
taniyE irundu ninaittakkAl
ennait
tiniya irundaden nenju?
taniyE irundu ninaittakkAl – When I was alone and was brooding
over his leaving me
ennait(tu) – why is that?
iniya irundadu – feels sweet
en nenju? – for my heart?
As
far as this verse is concerned, most commentators from Manakkudavar,
Parimelazhagar and the subsequent ones up to the current ones, have interpreted
a word “tiniya” that is not in existence anywhere incuding prominent
dictionaties as “thianna” (eating), almost exhibiting herd mentality. The word in most literary works is always
would be split as “tu+iniya”, where “tu” would join with the previous word,
something like “anait” to make “anaittu”. In this verse also, “ennait tiniya”
must be “ennaittu + iniya”.
The
main theme of this chapter is that the maiden is angered at the heart which is
drawn to her man despite his leaving her in angst, and naturally she would also
exhibit the same in this verse too. The meaning of the verse must be thus: “When I am alone, thinking of his leaving
(bitterly), why does my mind feel sweet thinking of him?” – questions the
maiden, implying that she expects her heart to be bitter with her man for
leaving her.
The
existing commentaries say, “ when I am alone and thinking of him, why my heart
gave me misery as if eating me away”. This would have been perfect interpretation
if he was expressing her miserable state being sad. In this chapter she is
exhibiting her picking a fight with her heart.
“Why and for what does my heart feel so sweet
when here -
I am
alone, brooding over about his leaving me in despair?”
இன்றெனது குறள்(கள்):
(மற்றவர் உரையையொட்டி)
என்னெஞ்சே உண்பபோல் துன்பாம் தனித்திருந்து
அன்னவரை உள்ளிய போது
ennenjE
uNbapOl tunbAm tanittirundu
annavarai
uLLiya pOdu
என்னுடைய உரையையொட்டி)
இனிப்பதேன் என்நெஞ்சம்
ஊடாது நானோ
தனித்திருந்து
எண்ணிடும் போது?
inippadEn
ennenjam UDAdu nAnO
tannittirundu
eNNiDum pOdu?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam