நவம்பர் 02, 2015

குறளின் குரல் - 1292

2nd Nov, 2015

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.

                           (குறள் 1286: புணர்ச்சிவிதும்பல் அதிகாரம்)

காணுங்கால் - என் காதலரைக் கண்டு அவருடன் இருக்கும்போதெல்லாம்
காணேன் தவறாய - அவர் குற்றங்கள் எனக்குப் புலப்படா, குறைகளைக் காணமாட்டேன்
காணாக்கால் - அவர் என்னைப் பிரிந்து நான் அவரை காணாதிருக்கும்போது
காணேன் தவறல்லவை - அவரிடதில் குற்றங்களைத்தவிர வேறு எவற்றையும் காணவில்லை

காதற் கணவரோடு கூடியிருக்கையில், அவரிடம் உள்ள தவறுகளைக்கூட நான் பார்ப்பதில்லை; அவர் என்னுடன் இல்லாது பிரிந்து சென்றபோது, அவரிடம் தவறுகளைத் தவிர நான் வேறு எதுவும் நல்ல குணங்களை நான் பார்க்கவில்லை என்று தோழியிடம் தன் மனநிலையைச் சொல்லிப் புலம்புகிறாள் காதற் தலைவி.

இது மிகுந்த அன்பின் காரணமாக வருவது. கி.வா.ஜ அவர்களின் ஆராய்ச்சிப் பதிப்பிலே முத்தொள்ளாயிரத்தினின்றும், கலிங்கத்துப் பரணியினின்றும் இக்குறளை ஒட்டிய பாடல்களை மேற்கோளாகக் காட்டியுள்ளார். அவையாவன:

“மாணார்க் கடந்த மறவெம்போர் மாறனைக்
காணாக்கால் ஆயிரமும் சொல்லுவேன் கண்டக்கால்
பூணாகம் தாவென்று புல்லப் பெறுவேனோ
நாணோ டுடன் பிறந்தநான்”   (முத்தொள்ளாயிரம்)

“பேணும் கொழுநர் பிழைகள் எல்லாம்
       பிரிந்த பொழுது நினைந்தவரைக்
காணும் பொழுது மறந்திருப்பீர்
       கனபொற் கபாடம் திறமினோ”  (கலிங்கத்துப் பரணி 65)

Transliteration:

kaNunngkAl kANEn tavarAya kANAkkAl
kANEn thavaral lavai

kaNunngkAl – When I see him and be with him
kANEn tavarAya – even his mistakes, or wrong deeds, I would not see
kANAkkAl – When I don’t see him, because he has gone away leaving me
kANEn thavarallavai – I would not see anything right on his side..

The maiden laments to her friend in this verse. “When he is with me and I see him, even his mistakes and wrong deeds, I would not see; But when he has gone away leaving me, I would not see anything right on his side and would only find wrong doing on his part.

This state is perhaps because of excessive love and the pangs of separation.  Ki.vA.jA has cited two verses from MuthoLLAyiram and KalingathupparaNi that reflect a maidens’ thoughts similarly.

“See nothing but his faults when he is away
 See no faults of his when I am in his sway”

இன்றெனது குறள்:

காண்பேன்நான் குற்றமே காணாக்கால் காண்கையில்
காண்பதில்லை குற்றமொன் றும்

kANbEnnAn kuRRamE kANAkkAl kANkayil
kANbadillai kuRRamon Rum

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...