29th Oct, 2015
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.
(குறள் 1282:
புணர்ச்சிவிதும்பல் அதிகாரம்)
தினைத்துணையும் - ஒரு சிறு தினை அளவுக்குக் கூட
ஊடாமை வேண்டும் - ஊடல் கொள்ளக்கூடாது
பனைத்துணையும் - பனை மரத்தளவுக்கு உயர்ந்து வளர்ந்து
காமம் நிறைய வரின்.- காம வேட்கையானது, அதனினும் மிக்கு வருமாயின்
இக்குறள்
இருபாலருக்குமே பொருந்துவதாகவே இருப்பினும், தலைவன் பிரிந்து செல்லும் குறிப்பறிந்து
ஊடுதல் என்பது காதற்தலைவியருக்கே பொருந்துமாதலின், தலைவியை மையப்படுத்தியே இக்குறள்
சொல்லப்பட்டதாக கருதலாம்.
தினையென்பது
ஒரு சிறிய உணவு தானியம். அந்த அளவுக்குக்கூட காதற்தலைவி தன் காதலனோடு ஊடல் கொள்ளக்கூடாது.
எப்போது? அவளது காம வேட்கையானது பனைமரத்தளவுக்கு உயர்ந்து அதனினும் மிக்கு வளர்ந்திருப்பின்!
அப்போது அவள் ஊடி, அதனால் காதலனைக் கூடாமல், அவனும் பிரிந்த பிறகு, அவள் நெஞ்சம் மிக்க
துயரத்துழலும், என்பதால், இது சொல்லப்பட்டது.
Transliteration:
tinaittuNaiyum UDAmai
vENDum panaittuNaiyum
kAmam niRaiya varin
tinaittuNaiyum – even to the extent of tiny millet
grain
UDAmai vENDum – shall not have love quarrel
panaittuNaiyum – if as tall as palmyra tree
kAmam niRaiya varin – the desire for coition is there in
excess.
Though this verse sounds common to both
genders, to be in love-quarrel with her beloved is typical of maiden in love,
when her beloved leaves her on his work, it is construed to be said from her
point of view.
A maiden shall not be in love quarrel
with her beloved even to the extent of the tiny millet grain; especially when
her desire for coition or union with her beloved is taller than the palmyra
tree; why so? Perhaps because she will be the one to suffer subsequent to his
leaving her, if she passes the opportunity to be in amorous union when her
desire is high, because she her anger about his impending departure.
“You shall not have even a tiny millet grain
sized pretense fight
when the
desire for coition is as tall as palmyra trees’s height”
இன்றெனது குறள்:
கடுகளவும்
ஊடல் கருதற்க காமம்
நெடுநீர்போல்
மிக்கு வரின்
(நெடுநீர்
- கடல்)
kaDugaLavum UDal karudaRka kAmam
neDunIrpOl mikku varin
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam