127: (Yearning togetherness - அவாவயின்விதும்பல்)
[This chapter
name itself is subject to question. Some books have said, “avarvayin vidumbal”
which does not seem to make much sense; “avAvayinvidumbal”
seems to make more sense. When the desire to be with the separated lover is
there, there is yearning of togetherness. Parimelazhagar seems to think that
this chapter is meant for both maiden and her lover equally as yearning for
togetherness from both; but closer look at the verses reveal, they are all said
from the perspective of pining maiden only. This chapter also feels a bit like
reading an earlier chapter of body losing its lustre.]
8th Oct, 2015
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.
(குறள் 1261:
அவாவயின்விதும்பல் அதிகாரம்)
வாள் அற்றுப் - ஒளி இழந்து
புற்கென்ற
- காட்சி மங்கின
கண்ணும் - கண்களும்
அவர்சென்ற நாளொற்றித் - தலைவர் விட்டுச் சென்ற நாளை சுவற்றில் குறி
வைத்து எண்ணியும்
தேய்ந்த விரல் - என் விரல்களும்
பிரிந்து சென்ற தலைவன் வரும் வழிபார்த்து காட்சி
மங்கி, என் கண்கள் ஒளியிழந்தன, அவர் விட்டு பிரிந்து சென்ற நாட்களை எண்ணி சுவரில் குறித்து
வைத்து எண்ணி எண்ணி என் கைவிரல்களும் தேய்ந்தன என்று நோகிறாள் காதற்பெண். இவ்வதிகாரக்குறள்களை
படிக்கும்போது ஒருவேளை உறுப்பு நலன் அழிதல் அதிகாரத்துக்கே சென்றுவிட்டோமோ என்று தோன்றாமலில்லை.
வரவை நோக்கி கண்கள் மங்கி ஒளியிழத்தலை பல கவிஞர்கள்
கூறிவிட்டனர். குறுந்தொகைப் பாடல் வரியான “கண்ணே
நோக்கி நோக்கி வாளிழந்தனவே” என்கும். சீவக சிந்தாமணியும், “கண்ணும் வாளற்ற”
என்கும். விரல் தேய்தலை, “ஆய்கோ டிட்டுச்
சுவர்வாய் பற்றுநின் படா” என்கிறது குறுந்தொகைப் பாடல். நாலடியார் பாடல், “நாள்வைத்து
நம்குற்றம் எண்ணும்கொல்” என்கிறது.
Transliteration:
vALaRRup puRkenRa kaNNum avarchenRa
nALORRit tEinda viral
vAL aRRup – losing the power of light in them
puRkenRa – become dim
kaNNum – the eyes;
avarchenRa nALORRit – counting the days, he has been away
on the wall
tEinda viral – my fingers have worn
Looking for her beloved who has gone
away, without sleeping, her eyes have lost lustre and become dim; and counting
for the number of days he has been away, by touching the wall and marking
repeatedly, her fingers have also worn out, complains the maiden. While reading
the verses of this chapter, it feels if we have travelled couple of chapters
back (Bodys’
Deterioration of beauty)
Though many poets have written enough
about eyes losing lustre, becoming dim, works like Kurunthogai and Cheevaga
ChintAmani have used almost similar words to describe. The thought of figers
wearing out is new and refreshing. Again, nAladiyAr and kuRunthogai have
expressed similarly almost during the times of vaLLuvar.
“Looking for his return my eyes have lost lustre and become dim;
Counting on the wall by
marking repeatedly, fingers are now slim”
இன்றெனது
குறள்:
வரும்நாளை எண்ணி விரல்தேய கண்ணோ
இருண்டு ஒளியிழக் கும்
varumnALai
eNNi viraltEya kaNNO
iruNDu
oLiyizhak kum
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam