அக்டோபர் 05, 2015

குறளின் குரல் - 1264

5th Oct, 2015

பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை.
                           (குறள் 1258: நிறையழிதல் அதிகாரம்)

பன்மாயக் கள்வன் - பலவித பொய்களில் வல்லவனாய் என் உள்ளங் கவர் கள்வன்
பணிமொழி அன்றோ - அவன் தாழ்மையுடன் பேசுகின்ற பேச்சன்றோ
நம் பெண்மை உடைக்கும் - என்னுடைய பெண்மையின் உறுதியை, என் நிறையை அழிக்கின்ற
படை - படைக்கலம் போன்றது

பலவிதமாய் மாயங்களைச் செய்யவல்ல என்னுடைய உள்ளத்தைக் கவர்ந்த கள்வனாகிய என் தலைவன் தாழ்மையுடன் பேசுகின்ற மொழிகளல்லவோ என்னுடைய பெண்மையின் உறுதியை உடைத்து, என்னுடைய் நிறையை அழிக்கின்ற படைக்கலம், என்று காதற்தலைவி தன்னுடைய தோழியிடம் தன் தலைவனின் இனிய பசப்புச் சொற்கள் முன்பு தன்னுடைய உறுதி குலைவதௌக் கூறுகிறாள்.

குறுந்தொகை வரிகளும், முத்தொள்ளாயிரம் வரிகளும் இவ்வகையிலே கூறுவதைக் காணலாம்.

“கள்வனும் கடவனும் புணைவனும் தானே” – (குறுந்தொகை: 318:8)
“இவன் எனது, நெஞ்சை நிறையழித்த கள்வன்” – (முத்தொள்ளாயிரம் 102)

Transliteration:

panmAyak kaLvan paNimozhi anROnam
peNmai uDaikkum paDai

panmAyak kaLvan – One that is well versed in many tricks
paNimozhi anRO – Is not his enticing and submissive words?
nam peNmai uDaikkum – to break my feminine firmness
paDai – the weapon

Are not the enticing and submissive words of my beloved that is capable and is well versed in many tricks, weapons to break my femining firmess? – asks the maiden to her friend.  She admits that her resolve dissolves before the sweet words of her trickster of a lover.

There are examples abound throughout many literary works, calling a lover, a trickster and a person of smooth tongue.

“Aren’t the enticing and submissive words of this trickster,
 the weapons that break my feminine resolve to disaster?”


இன்றெனது  குறள்:

கள்ளமாய் தாழ்ந்தன்பர் பேசலன்றோ என்பெண்மை
கிள்ளி எறியும் படை?

kaLLamAi tAzhndanbar pEsalanRO enpeNmai
kiLLi eRiyum paDai?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...