124:
(Bodys’ Deterioration of beauty - உறுப்பு நலனழிதல்)
[Because of
her worries because of the on set of evening times that are painful, gradually
the maiden loses the beauty of her eyes, shoulders, eyebrows, and other parts
of her body that show her beauty. In the chapter, VaLLuvar describes her state
through the next ten verses.]
8th Sep, 2015
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்.
(குறள் 1231:
உறுப்பு நலனழிதல் அதிகாரம்)
சிறுமை - ஆற்றாமை (தலைவன் பிரிவால்)
நமக்கொழியச் - நமக்கு வந்து சேர
சேட்சென்றார் - சேண் சென்றார் - தொலைவுக்குச் சென்றுள்ளார்
உள்ளி - அதை எண்ணி (தம்முடைய ஒளியினை இழந்து, வாடி)
நறுமலர் - வாசமலர்களுக்கு முன்பாக
நாணின கண் - நாணிக்கிடக்கின்றன கண்கள்
காதற் தலைவியின்
கண்கள், தலைவனது பிரிவில் ஆற்றாது அழுதழுது குளமாகி, இரவெல்லாம் தூங்காது விழித்திருந்து
ஒளியிழந்துள்ளன. அதைக் கண்டு தலைவியின் தோழி இவ்வாறு கூறுகிறாளாம் தலைவியிடம். “தலைவனோ
நமக்கு ஆற்றாமை வந்து சேர தொலை தூரத்துக்குச் சென்றுள்ளார். அதை எண்ணி அழகாக விழித்திருக்கும்
வாசமலர்களாக இருக்கும் அல்லி, குவளத் தாமரை போன்ற மலர்களுக்கு முன்பாக உன் கண்கள் பொலிவிழந்து
வெட்கி நிற்கின்றன.” தலைவன் பிறிவை பிறர்க்குக் காட்டிக்கொடுத்துவிடும் என்று, தலைவியை
ஆறுதல் அடையச் சொல்கிறாள்.
Transliteration:
cirumai namkkOzhiyAs cETceNRAr uLLi
naRumalar nANina kaN
cirumai – pangs of separation (because of her
beloved’s separation)
namkkOzhiyAs – for that to come to us
cETceNRAr – gone far away
uLLi – thinking of him
naRumalar – (before) fragrant flowers (like lily,
lotus, kuvaLai)
nANina kaN – these eyes are ashamed
Eyes of the maiden in love have lost
luster because of incessant crying, loss of sleep because of her lover going
far away, leaving her in pain and pangs of separation. Her friend consoles her
and asks her not to be so distressed. “Your love has left you and gone far
away; and your eyes show your pain and sleeplessness because of that, losing
their lustre. They will reveal the separation to other if you persistently cry
and not sleep. So please console yourself”
“Thinking of your lover gone far away, leaving you in the pain of
separation
Your eyes’ve lost lustre in
shame before the fragrant flowers, in frustration”
இன்றெனது குறள்:
ஆற்றாமை
செய்து அகன்றாரை எண்ணியே
நாற்றமலர்
நாணும்தன் கண்
ARRAmai seidu aganRArai eNNiyE
nARRamalar nANumthan kaN
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam