செப்டம்பர் 07, 2015

குறளின் குரல் - 1236

7th Sep, 2015

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்.
                           (குறள் 1230: பொழுது கண்டிரங்கல் அதிகாரம்)

பொருள் மாலையாளரை உள்ளி - பொருள் தேலை தன் இயல்பாகக் கொண்ட என் காதலரை எண்ணி
மருள் மாலை - மயங்கும் மாலைப் பொழுது கண்டு
மாயும் - மாளுமே
என் மாயா உயிர் - மற்றவற்றால் மாளாத என்னுடைய உயிர்

பொருள் ஈட்டுதலை தன்னுடைய இயல்பாகக் கொண்ட என் காதலரை எண்ணி மயங்குகின்ற மாலைப் பொழுதில் மாயும், காதலர் பிரிவிலும் மாளாத என்னுடைய உயிர் என்கிறாள் காதற் தலைவி.  காதலனைப் பிரிவதுகூட துயரில்லை. ஆனால் அவன் பிரிவாற்றைமையை மிகைப்படுத்தி தினமும் கொல்லாமல் கொல்லும் மாலை பொழுதிலும் கொடுமையானது வேறில்லை என்கிறாள் காதற்தலைவி இக்குறள் வாயிலாக.

Transliteration:

poruLmAlai yALarai uLLi maruLmAlai
mAyumen mAyA uyir

poruLmAlai yALarai uLLi – Thinking of my beloved who has earning as his nature
maruLmAlai – In this dazed time of the day, evening
mAyum – will perish
en mAyA uyir – otherwise, that does not perish for other reasons.

My beloved whose nature is to earn wealth, is away from me on that pursuit. My life that did not perish even when my beloved went away on his pursuit will now perish thinking of my beloved during those dazed evenings. There is none cruel than these evenings that arrive in the absence of my beloved to take my life, laments the maiden.

“Thinking of my beloved, whose nature is pursuit of wealth,
 in this dazed evening, my unextinguished life will see death”


இன்றெனது  குறள்:

பொருள்தேடிச் சென்றாரை எண்ணிமருள் மாலை
கருகுமென் மாளா உயிர்

poruLtEDich chenRarai eNNimaruL mAlai
karukumen mALA uyir

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...