ஆகஸ்ட் 21, 2015

குறளின் குரல் - 1219

21st Aug, 2015

நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.
                           (குறள் 1213: கனவு நிலை உரைத்தல் அதிகாரம்)

நனவினால் - நான் விழித்திருக்கையில்
நல்காதவரைக் - எனக்கு அளி/அன்பு செய்யாரை
கனவினால் - நான் என்னுடைய கனவில்
காண்டலின் - காணும்போது
உண்டென் உயிர் - என்னுடைய உயிரானது பிழைத்திருக்கும் அழியாமல்

என்னுடைய காதலர் நான் விழித்திருக்கையில் என்னிடம் அன்பு செய்யாராயினும், அவரைக் கனவில் நான் காணும்போது, அதனால் மட்டுமே என்னுடைய உயிர் வாழ்கிறது. காதலர் கல் நெஞ்சராயினும் காதற் தலைவியின் உறுதிப்பாடு இதில் காண்கிறது. கனவிலாவது காட்சி தருகிறாரே என்று காதற்தலைவி ஆறுதல் அடைகிறாளாம்.

Transliteration:

nanvinAl nalgA davaraik kanavinAl
kANDalin uNDen uyir

nanvinAl – When I am wakeful
nalgAdavaraik – that who does not show me love
kanavinAl – because of my dreams
kANDalin – when I see
uNDen uyir – my life sustains and lasts

Though my lover is not kind and reciprocative to shower his love, only because I see him in my dreams, my life sustains. Though he is stone-hearted, the resolve of maiden is seen in this verse. She consoles herself that he at least shows up in her dreams.

“Though my lover is not compassionate to me in my wakeful state,
 because he appears in my dreams, my life sustains without abate”


இன்றெனது  குறள்:

விழிக்கையில் அன்பிலாரை நான்கனவில் காண
அழியா துயிர்க்கு முயிர்

vizhikkaiyil anbilArai nAnkanavil kANa
azhiyA duyirkku muyir

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...