20th Aug, 2015
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்.
(குறள் 1212:
கனவு நிலை உரைத்தல் அதிகாரம்)
கயல் உண்கண் - கருமை உண்ட, மீன் போன்ற என்னுடைய கண்கள்
யான் இரப்ப - நான் வேண்டி கேட்டுக் கொள்ளத்
துஞ்சிற் - தூங்குமாயின்
கலந்தார்க்கு - என்னை காதலால் கலந்தவர்க்கு
உயல் உண்மை - நான் பிழைத்திருக்கும் உண்மையினை
சாற்றுவேன் மன் - சொல்லுவேன்
தூங்காமல் காதற்தலைவியின் மீன்போன்ற கண்கள்
கருமை படர்ந்து மையுண்டதுபோல் உள்ளனவாம். அவள் தான் தூங்கினாலாவது, தன் காதற்தலைவனைக்
கனவில் காணலாமே என்று ஏங்கி, தூங்க வேண்டுகிறாள். அவ்வாறு தூங்கினாலாவது, தன்னைக் காதலில்
கலந்தாரை கனவில் காணமுடியும்; அவ்வாறு காணும்போதுதான், அவருக்குத் தாம் பிரிவாற்றாமையையும்
தாங்கிக்கொண்டு, இன்னும் பிழைத்திருக்கும் உண்மையைக் கூறலாம், என்று நினைக்கிறாள் அவள்.
Transliteration:
kayaluNkaN yAnirappat tunjiR kalandArkku
uyaluNmai chARRuvEn man
kayal uNkaN – The fish like eyes that are dark as
if anointed with black pigment
yAn irappat –
yielding to my request
tunjiR – if they sleep
kalandArkku – to that who in love bonded to me
uyal uNmai – the truth that I am alive ( because
of thinking about him)
chARRuvEn man – would tell (him)
The maiden in love has not slept
thinking about her lover and her fish-like eyes have become dark because of
lack of sleep, as if anointed with black pigment. She says, if he she could
sleep at least she could see her lover in her dreams and would be able to tell
him the truth that despite being away from her beloved, she lives still.
“If my black, fish-like eyes, would close to sleep
I would tell my lover the truth that I live, in sleep”
இன்றெனது குறள்:
கருங்கயற்
கண்வேண்டத் தூங்கிடின் காத
லருக்குய்ந்த
உண்மைச்சொல் வேன்
karunkayaR kaNvENDat tUngiDin kAda
larukkuynda uNmaichchol vEn
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam