ஜூலை 06, 2015

குறளின் குரல் - 1173

6th Jul, 2015

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.
                    (குறள் 1167: படர்மெலிந்திரங்கல் அதிகாரம்)

காமக் - கூடியிருக்கும் இன்பம்
கடும் புனல் - அது ஒரு வெள்ள சுழலாய் இருந்து அழுத்துகிறது
நீந்திக் - அதை நீந்தி கடந்து
கரை காணேன் - அதன் எல்லை ஈதென்று இன்னும் காணமுடியவில்லை.
யாமத்தும் - ஆனால் நள்ளிரவிலும் நானோ
யானே உளேன் - தனித்து வாடுகிறேன் இன்று.
என் தலைவனோடு கூடியிருக்கும் இன்பம், நீந்தி கடந்து எல்லைக் காண்பதற்கு அரிய அழுத்தும் ஒரு வெள்ளச் சுழலாய் இருக்கிறது. ஆயின் நானோ இந்த நள்ளிரவு நேரத்திலும் தனியாகவே இருக்கிறேன் என்று தலைவி தன்னை நீங்கிச் சென்ற தலைவனை எண்ணி பசலையில் வருந்திப் புலம்புகிறாளாம்.

Transliteration:

kAmak kaDumpunal nIndik karaikANEn
yAmattum yAnE uLen

kAmak – The lust ( to be with my lover)
kaDum punal – that is a torrential flood that
nIndik – to swim and cross
karai kANEn – and have not found the shores of that
yAmattum – even in this mid night
yAnE uLen – I am all alone here (in pain)

The lust conjugal pleasure with my lover is a torrential flood and terrible tide that is difficult to cross and find shores. I am so deeply caught in it. But what to do, I am all alone, awake wide without him, laments the maiden, pining her separation from her lover.

“This lust for union with my love, is such a hard to swim terrible tide
 and find shores; but, I am all alone in this night in pain awake wide”


இன்றெனது  குறள்:

வெள்ளமாம் காமச் சுழலைக் கடக்கிலேன்
நள்ளிர வும்யான்த னித்து

veLLamAm kAmach chuzalaik kaDakkilEn
naLLira vumyAn tanittu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...