5th Jul, 2015
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.
(குறள் 1166:
படர்மெலிந்திரங்கல் அதிகாரம்)
இன்பம் - உறும் இன்பம் (காமத்தால்)
கடல்மற்றுக் - கடலளவாம்
காமம் - காமம் தரும் புணர்வின்பம்
அஃது அடுங்கால் - அக் காமமானது வருத்தும்போது
துன்பம் - அதனால் உறும் துன்பமோ
அதனிற் பெரிது - அது தரும் இன்பத்தை விடப் பெரியது.
காமத்தால் உறும் புணர்ச்சியின்பம் கடலளவு பெரிதாகவே தோன்றும்
காதலர்களுக்கு, குறிப்பாகக் காதற் தலைவியருக்கு. ஆனால் தலைவன் பிரிவால், அதே காமத்தால்
பசலைப் படர்ந்து மேனியை வாட்டுகையில், அது தரும் துன்பமோ காமத்தால் வரும் இன்பத்தை
விடப் பெரியது. இன்பத்தைத் தொடர்ந்து வருவது துன்பமே என்பதை உணர்ந்தாற்போல பேசும் தலைவியின்
கூற்று இது.
Transliteration:
Inbam
kaDalmaRRuk kAmam ahdaDungAl
Tunbam
adaninum peridu
Inbam –
the ( conjugal) pleasure
kaDalmaRRuk –
is to the extent of an ocean
kAmam –
the lustful desire to be union
ahd(u)
aDungAl – when that same lust torments
Tunbam –
the pain caused is
adaninum
peridu – much more than the pleasure given by the same
lust.
The pleasure derived from the lust for physical
union with her man that she is in love with, is comparable to the extent of a
vast ocean. But when they are separated, the same lust gives her pale skin and
that’s even more painful than the vastness of the ocean, says the maiden. It is
also implied that the pain follows pleasure, a reality universally.
“The
pleasure of conjugal love is ocean like, vast and deep
But the pain of separation in love is far
greater of a trap”
இன்றெனது
குறள்:
காமத்தால்
இன்பம் கடல்போல் வருந்ததரும்
தேமற்துன்
போவதின் மிக்கு
(காமத்தால்
இன்பம் கடல்போல்! வருந்த தரும் தேமற் துன்போ அதின் மிக்கு!)
(தேமல்
- படரும் பசலை)
kAmattAl
inbam kaDalpOl varundatarum
thEmaRtun
bOvadin mikku
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam