26th Jun, 2015
துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை.
(குறள் 1157:
பிறிவாற்றாமை அதிகாரம்)
துறைவன் - நெய்தல் நிலத் தலைவன்
துறந்தமை - என்னை விட்டு பிரிந்ததை
தூற்றாகொல் - ஊரரியச் உரத்துச் சொல்லாதோ?
முன்கை இறை - என்னுடைய முன்கையின் மணிக்கட்டிலிருந்து
இறவா நின்ற வளை - தங்காது கழலுமோ என்ற அச்சுறுத்துகிற வளையணிகள்?
தலைவனுடைய பிரிவால் தலைவி உடல் மெலிந்ததாம்! “என்னுடைய
முன்கை மணிக்கட்டைக் கடந்து, கழன்று கீழே விழுந்திடுமோ என்ற வகையில் அச்சுறுத்திக்
கொண்டிருக்கும் என் கை வளையானது, நெய்தல் நிலைத் தலைவர் (கடலும் கடல் சார்ந்த் நிலத்தின்
தலைவர்) என்னைப் பிரிந்து சென்றார் என்பதை ஊராரெல்லாரும் அறியும் படி தூற்றிச் சொல்லாதோ”,
என்று தலைவி தன் தோழியிடம் நொந்து கூறுவதாக உள்ளது இக்குறள்.
Transliteration:
turaivan
turandamai tURRakol munkai
iRaiiRavA
ninRa vaLai.
turaivan –
my prince of ocean land
turandamai –
that he left me
tURRakol –
won’t it spread, for the town to know
munkai
iRai – from the wrist in my forehand
iRavA
ninRa vaLai – the bangle that may fall off any time (because
they have become slim)
Because of lovers’ separation, the maiden has lost her
weight, feeling miserable. “The bangles or bracelets that threaten to fall off
anytime, because of my losing my health, and becoming pale and thin; Won’t that
announce it to the world, about my lover, the prince of ocean land, leaving me
in this miserable state?”, the maiden in lover to her friend, in this verse.
“The
bracelet threatens to fall off the my wrist announcing
to the town that my prince of ocean lands’
left me sobbing!
இன்றெனது
குறள்:
நொய்ந்துடல்
கைமணிக் கட்டை வளைநீங்கி
நெய்தலர்
நீத்ததுரைக் கும்
(நெய்தலர்
- நெய்தல் நிலத் தலைவர்)
noinduDal kaimaNik kaTTai vaLainIngi
neidalar nIttaduraik kum
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam