மே 22, 2015

குறளின் குரல் - 1129

23rd May, 2015

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்.
                        (குறள் 1123: காதற்சிறப்புரைத்தல் அதிகாரம்)

கருமணியிற் - என் கண்ணின் கருமணியிலே
பாவாய் - நிற்கின்ற பாவாய்
நீ போதாய் - நீ அங்கே நில்லாமல் செல்
யாம் வீழும் - நான் காதலில் வீழ்ந்துவிட்ட
திரு நுதற்கு - அழகு நெற்றியுடையாளுக்கு
இல்லை இடம் - நீ இருப்பதால் இடம் இல்லாதிருக்கிறது

கண்ணின் கருமணியில் இருக்கின்ற பாவைதான் ஒருவருடைய பார்வைக்குக் காரணமாயது. அது நின்று இருப்பதால் தன் கண்ணிலேயே தாம் கட்டிவைத்திருக்கிற காதற் பாவைக்கு இடம் இல்லாது போகிறதாம். அதனால் கண்ணின் பாவையை, தன் மனங்கவர்ந்த அழகிய நெற்றியுடைய பாவைக்கு இடம் விட்டுப் போகச் சொல்லுகிறான் காதற் தலைமகன், இக்குறளில்.

பின்னாளில் பாரதியாரோ, “என் கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா, என்னுயிர் நின்னதன்றோ” என்று கண்ணனைக் காதலியாக பாவித்து, அவனே கண்ணின் பாவையெனவும் கூறியதற்கு முன்னோடிக் கற்பனை வள்ளுவன் செய்தது.

Transliteration:

karumaNiyiR pAvAinI pOdAyAm vIzhum
tirunudaRku illai iDam

karumaNiyiR – In the pupil of my eye
pAvAi – reflector of the seen image
nI pOdAi – please you move out of that place
yAm vIzhum – the maiden I have fallen for
tirunudaRku – with beautiful eyebrows/foreheaad
illai iDam – does not have the place to be there.

The image seen in the pupil of the eye, connected to the brain through optical nerves make us realize the object seen. In this verse the man in love asks that seen image to move out of the pupil as there is no room for his maiden with beautiful forehead/eyebrows to be there, otherwise. Though a love poem, it also reveals the cursory lever scientific thought of the day as to how the image is seen by the human eye.

More recently for BharatiyAr to write, “en kaNNin pAvaiyanRO kaNNammA, ennuyir ninnadanRO”, VaLLuvar has set the stage and been a forerunner of such imagination.

“O! Pupil of my eye! Please, leave at once your place in my eyes!
 My beloved maiden of beautiful eyebrows has no place otherwise”

இன்றெனது குறள்:

பார்வையின் பாவையே போவாய்நீ பாவைக்குச்
சேர்ந்தேக இல்லை யிடம்

pArvaiyin pAvaiyE pOvAinI pAvaikkuch

chErndEga illai iDam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...