22nd
May, 2015
உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.
(குறள் 1122:
காதற்சிறப்புரைத்தல் அதிகாரம்)
உடம்பொடு - இந்த ஊனுடம்போடு
உயிரிடை - உயிரிடத்திலே
என்ன - என்ன நெருக்கமோ
மற்று அன்ன - மற்று அதைப்போலவே
மடந்தையொடு - இப்பெண்ணொடு, என் காதலியோடு
எம்மிடை - என்னிடத்தில் இருக்கின்ற
நட்பு - நெருக்கம், காதல்
எவ்வொரு ஊனுடம்புக்கும்
அதைச் செலுத்தும் உயிரோடு என்ன நெருக்கமோ, அதேபோன்றதுதான், என்னுடைய காதலியாம் இவளோடு
, எனக்கும் உள்ள நட்பு, காதல் என்று காதல் தலைமகன் கூறுகிறான். காதலியை உடலாக, அதாவது
தூலமாகவும், தன்னை உயிராக, அதாவது சூக்குமமாகவும் உருவகித்துக் கூறுவதிலிருந்து, அவளோடு
தான் கலந்திருப்பது மற்றவர்க்குத் தெரியாது, ஆனால் தன்னைத் தாங்கிய உடலாம் காதற்பெண்
அறிவாள் என்பதையும் உணர்த்துக்கிறான்.
Transliteration:
uDamboDu
uyiriDai ennamaR Ranna
maDandaiyoDu
emmiDai naTpu
uDamboDu –
for this body made of flesh
uyiriDai –
with the soul
enna –
like the closeness
maRR(u)
anna - likewise
maDandaiyoDu –
with this maiden, my love
emmiDai –
what I have with her
naTpu –
the close friendship and the love
Like a body made of flesh bound to the soul, the
life-force, is my friendship to maiden that I love, as we are inseparably wound
together, says the man in love in this verse. The metaphorical references of his
love-maiden to the physical body and himself to the unseen soul that brings
life to the body, the man wants to convey that though he is inseparably part of
her, his love, unseen, she would know his presence in her, the nature of
elevated bond.
“Like
the bond of the body to its life force - soul
is mine to my maiden, inseparably wound
whole!”
இன்றெனது குறள்:
என்னவ ளோடென் உறவு உடம்பொடு
இன்னுயிர்க் கொண்டது போல்
ennava
LOden uRavu uDamboDu
innuyirk
koNDadu pOl
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam