20th
May, 2015
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.
(குறள் 1120:
நலம்புனைந்துரைத்தல் அதிகாரம்)
அனிச்சமும் - மென்மையான அனிச்சப் பூவும்
அன்னத்தின் தூவியும் - அன்னத்தினுடைய இளஞ்சிறகும்
மாதர் அடிக்கு - இம்மாதின் பாதங்களுக்கு
நெருஞ்சிப் பழம் - நெருஞ்சி முள் போன்று கொடிய துன்பமாம்
இவற்றைவிட மென்மையானவை இல்லை என்று சொல்லக்கூடிய அனிச்ச
மலரும், அன்னத்தின் இறகுமே நெருஞ்சி முள்ளாகத் தைக்குமளவுக்கு மென்மையாகன பாதங்களைக்
கொண்டவள் என்னால் விரும்பபடுகிற இம்மாது, என்று காதலன் காதலியின் பாத மென்மையை உயர்த்திக் கூறுகிறான். சீவக சிந்தாமணி காப்பிய
ஆசிரியருக்கும், இதே கற்பனை உதவியிருப்பதைக் காணலாம்.
“அம்மெல் அனிச்சமலரும் அன்னத் தூவியும்
வெம்மை யாமென் றஞ்சி மெல்ல மிதியாத
பொம்மென்
நிலவப் பூம்போதனநின் அடி”
(சீ.2454)
“அனித்த
மிதிப்பினும் பனித்தல் ஆனா ஒளிச்செஞ் சீறடி” என்று பெருங்கதை வரியும்,
அனிசத்தினும் மென்மையானது பாதமென்று கூறுகிறது
Transliteration:
Anicchamum
annattin tUviyum mAdar
aDikku
nerunjip pazham
Anicchamum –
the soft anicha flower
annattin
tUviyum – and the soft feathers of swan
mAdar –
my maiden
aDikku –
for her feet
nerunjip
pazham – like thorn.
Even the softest flower aniccham and the light
feathers of swan do feel like a thorn compared to the even softer feet of my
maiden, says the man in love. This kind of comparisons have are seen in Perungadai
and Cheeva chintaamani also.
“Even
the aniccham flower and the swans’ feathers so light
feel like the thorns of Nerunji compared to my
maidens’ feet”
இன்றெனது குறள்:
அணங்கின் அடிகட்கு அன்னத் திறகும்
நுணங்கும் அனிச்சமும் முள்
aNangin
aDigaTku annat tiRagum
nuNangum
anichchamum muL
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam