19th
May, 2015
மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.
(குறள் 1119:
நலம்புனைந்துரைத்தல் அதிகாரம்)
மலரன்ன கண்ணாள் - மலர்களைப் போல் விழிகளைக் கொண்டாளின்
முகம் ஒத்தியாயின் - அழகு முகத்துக்கு நீ ஒப்பாக வேண்டுமென்றால்
பலர் காணத் - பலர் காணுகின்றவாறு
தோன்றல் - தோன்றாதே
மதி - நிலவே!
காதல்
தலைவன் நிலவைப்பார்த்து, தன் காதலியின் அழகு மற்றும் கற்பு நெறியென இரண்டு பண்பு நலன்களையும்
பாராட்டிக் கூறுகிறானாம் இவ்வாறு: “நிலவே உன்னை நான் என்னுடைய மலர்விழி மங்கைக்கு ஒப்பாகப் பாராட்டவேண்டுமாயின்,
நீ இவ்வாறு பலர் கண்களில் தெரியுமாறு தோன்றுவதை விட்டுவிடு”.
ஏன்
அவ்வாறு கூறுகிறான்? விலைமாதரும் அழகாயிருப்பர் ஆயினும் கற்பெனும் அணியினைப் பூண்டவர்கள்
அல்ல என்பதை உணர்த்துவிதமாகவே அவ்வாறு நிலவைப் பற்றி கூறுவதாகத் தோன்றுகிறது. அனுமன்
கூறுவதாக கம்பன் எழுதிய “கண்டனன் கற்பினுக்
கணியை கண்களால்” என்னும் வரி நினைவுக்கு வருகிறது.
Transliteration:
Malaranna
kaNNAL mugamotti yAyin
palarkANat
thOnRal madi
Malaranna
kaNNAL – the maiden that has eyes comparable to flowers
Mugam
ottiyAyin – if you want to be compared to her
Palar
kANat – for many to see you
thOnRal –
don’t appear
madi –
moon!
The man in love with the beautiful maiden, in praise
of his lovers’ beauty as well as chastity says thus: “O Moon! If you want to be
compared to the beautiful flower like eyed maiden, you shall not display
yourself for many to see”
Why does he have to say that? After all concubines
and prostitutes are also beautiful, but devoid of chastity! He implies that by
saying that the moon appears for many to see always, thus lacking in chastity.
“O
Moon! If you wish to be worthy of comparison to this maiden,
with eyes like flowers, you shall not be seen
by many in open!”
இன்றெனது குறள்:
நிலவே மலர்விழி யாளொப்ப வேண்டின்
இலனென் றிருமற்றோ ருக்கு
nilavE malarvizi yALoppa vENDin
ilanen RirumaRRO rukku
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam