மே 09, 2015

குறளின் குரல் - 1115

9th May, 2015

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.
                        (குறள் 1109: புணர்ச்சி மகிழ்தல் அதிகாரம்)

ஊடல் - தாம் காதலிப்பவரோடு பொய்க்கோபத்தில் பிணங்குதல்
உணர்தல் - பிறகு அமைதி பெற்று, ஓரளவில், நிறுத்தி பின் நீங்குதலும்
புணர்தல் - பிறகு கூடி மகிழ்தலும் (கசப்புக்குப் பின் வரும் இனிப்பே போல்)
இவை -ஆகிய இம்மூன்றும்
காமம் கூடியார் - காதல் வயப்பட்டு ஒன்றுபட்டவர்
பெற்ற பயன் - பெறும் பயன்களாம்.

காதலில் இணைந்த இருவருக்குள் அவ்வப்போது சிறு பிணக்குகள் ஏற்படும்; அவைப் பொதுவாக தவறாகப் புரிந்துகொள்ளுதலாலோ, அல்லது பொய்யாகச் சிணுங்குதலாலோ ஏற்படுவன; பின்பு அவை இருவரில் ஒருவரோ அல்லது இருவருமோ அமைதியடைந்து, அவ்வூடலை தற்காலிகமாக நிறுத்தி வைத்தலால், நீங்கும்; பிறகு அவர்கள் கூடி முயங்குதலும் நடக்கும். ஆக இவை மூன்றுமே, காதல் வயத்தினர் பெரும் பயன்களாம்.

ஊடல் என்பது எப்படி பயனாகும் என்று எண்ணத்தோன்றுகிறது அல்லவா? கூடல் என்பதை இனிப்பெனக் கொண்டால், அதை எப்போது சாப்பிட்டுக்கொண்டிருந்தால் திகட்டி விடும், தவிர இனிப்பின் சிறப்பை உணருதலும் முடியாது. அவ்வப்போது கசப்போ, காரமோ இருந்தால், அதைத் தணிக்கும் விதமாக, இனிப்பைச் சாப்பிடுவதே இனிப்பின் அருமையையும் உணரவைக்கும். அதன் காரணமாகவே கசப்பினும் ஊடலும் பயனெனப்பட்டது.

இதைப் பெண்களுக்குரிய இயல்பாக நாலடியார் பாடலொன்று கூறும்; கண்ணனுக்கு இனிதான உடல் வனப்பை உடையவளாகவும், தன் காதலானது விருப்பத்திற்கு ஏற்ற வகையில் எல்லாம் தன்னை அலங்கரித்துக் கொள்ளுபவளாகவும், அச்சம்  உடையவளாகவும் ஊரில் உள்ள பிற ஆண்கள் அஞ்சி ஒதுங்கும் இயல்பை உடையவளாகவும், தன் கணவனுக்கு அஞ்சி, பணிந்து, காலமறிந்து அவனோடு பிணங்கிப், பின் இன்பம் உண்டாகும்படி உடனே அறிந்து ஊடல் தீர்க்கின்றவளாகவும் கபடமில்லாத பேச்சுக்களை உடையவளாகவும் இருப்பவளே சிறந்த மனைவியாவாள்.  அப்பாடல்:

"கட்கினியாள் காதலன் காதல் வகைபுனைவாள்
உட்குடையாள் ஊர்நாண் இயல்பினாள் - உட்கி
இடனறிந் தூடி இனிதின் உணரும்
மடமொழி மாதராள் பெண்".

Transliteration:

UDal uNardal puNardal ivaikAmam
kUDiyAr peRRa payan

UDal – to be in pretense quarrel
uNardal – then reconciling
puNardal – then be in physical union
ivai – these three
kAmam kUDiyAr – the two that are in relationship bonded by love
peRRa payan – the fruits of their love.

Between the two bonded by love, quarrels of short span, reconciliation, and then be in physical union are the fruits of their love. It is very common to have quarrels of misunderstanding or due to excessive poessiveness; then realizing the folly on the part of one or another, there would be reconciliation between the two; then to make up they would be in physical union to give pleasure to each other.

The reconciliation and then the union are always acceptable; but why then is the quarrel between the two bonded by love, is the natural question. If there is sweetness after sweetness, the sweetness is rarely felt or enjoyed. Only when followed by the tastes of bitterness or hotness, sweetness reveals itself to the taste buds; Hence bitterness is also placed as one of the fruits.

“Quarrels of short span, reconciliation, followed by coition
 are the fruits of love for the two bonded in wedded union”


இன்றெனது குறள்:

பிணங்கல் புரிதல்பின் கூடலே காதல்
இணங்கினார் எய்து பயன்

piNangal puridalpin kUDalE kAdal
iNanginAr eidu payan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...