8th
May, 2015
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.
(குறள் 1108:
புணர்ச்சி மகிழ்தல் அதிகாரம்)
வீழும் இருவர்க்கு - காதலில் வீழ்ந்த இருவருக்கு
இனிதே - இனிமையானதாம்
வளி இடை - காற்று இடையிலே
போழப்படாஅ - புகுந்து ஊடறுக்காத
முயக்கு - அளவிலான அணைப்பு
காதலில் வீழ்ந்த இருவருக்கு இடையிலான கூடலுக்கான அணைப்பு,
காற்றுகூட ஊடு புகுந்து அத அறுக்காத நெருக்கமாக இருப்பதே இருவருக்கும் இனிமையானதாம்.
இந்த கற்பனை கவிஞர்கள் முன்பும் பின்னும் செய்தவொன்றுதான். அகநானூற்றுப் பாடலொன்று
இவ்வாறு கூறுகிறது.
“வார்முலை
முற்றத்து நூலிடை விலங்கினும்
கவவுப்புலந் துறையும் கழிபெருங் காமத்து”
Transliteration:
vIzhum
iruvarkku inidE vaLiyiDai
pOzhap
paDAa muyakku.
vIzhum
iruvarkku – for the two that fall in love
inidE –
sweet it is
vaLiy
iDai – that even air inbetween
pOzhap
paDAa – goes and separates them
muyakku –
such tught embrace.
For the two that have fallen in love, the embrace
that doesn’t even let a little bit of air, between them is sweet; This
imagination has been done many times before and after vaLLuvar and even
conitinues in writers’ description of the closeness between the two in love.
For
the two that have fallen in deep love, it is sweetness,
An
embrace that doesn’t let even air to separate closeness”
இன்றெனது குறள்:
காதல்வீழ் காதலர்க்குக் கன்னலாம்
காற்றிடை
யாதலின்றி கூடும் அணைப்பு
kAdalvIz kAdalarkkuk
kannalAm kARRiDai
yAdalinRi kUDum aNaippi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam