ஏப்ரல் 22, 2015

குறளின் குரல் - 1098

22nd April, 2015

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.
                        (குறள் 1092: குறிப்பறிதல் அதிகாரம்)

கண் - அப்பெண்ணின் விழியானது
களவு கொள்ளும் -கள்ளத்தனமாக ஆணைப் பார்க்கின்ற
சிறுநோக்கம் - அவன் காணாத வகையில் அவனைப் பார்க்கின்ற கடைக்கண் பார்வை, தரும் இன்பம்
காமத்தில் - மெய்யால் தீண்டும் புணர்வில்
செம்பாகம் அன்று - பாதியென்று சொல்லமுடியாது
பெரிது - அதனிலும் மேலாம்

ஆணொருவனை பெண்ணவள் அவன் தம்மைப் பார்க்கும் போது நாணி தலை கவிழ்தலும், வெட்கத்தால் அப்படி பார்க்கவேண்டாம் என்று கெஞ்சுதலும், ஆனால் அவன் தன்னைப் பார்க்காதபோது, பார்க்கமாட்டானோ என்று ஏங்குவதும், அவனைக் கள்ளத்தனமாக ஒரவிழியால் பார்ப்பதும் காதல் களத்து நிகழ்வுகள்.

இதில் பெண்ணானவள் அவ்வாறு கள்ளத்தனமாக ஓரவிழியால் பார்ப்பதை மெய்யால் தீண்டும் புணர்விலே பாதியென்று சொல்லமுடியாது. அது அதனினும் மிகுதியாம், என்கிறார் வள்ளுவர்.

“கண்களவு கொள்ளும் சிறுநோக்கம்” என்பதை சீவகசிந்தாமணிப் பாடலொன்று, “ காசில் காமம் செப்பிக் கண்ணினால் இரப்பர்” என்கிறது.

Transliteration:

kaNkaLavu koLLum siRunOkkam kAmattil
sempAgam anRu peRidu

kaN – with her eye
kaLavu koLLum – sneaking a glimpse of her love
siRunOkkam – the pleasure of such a look from the corner of the eye
kAmattil – not comparable to the physical pleasure
sempAgam anRu – even as half of it
peRidu – it is definitely bigger and better.

A love-struck girl bows her head in bashfulness when her man sees her and sometimes, pleads not to see her like that; but in truth, she secretly desires if he could see her, when he does not pay attention and also looking at him through the corner of her doe-eye. These are very common in the game of love.

In this verse, the male feels that such a look through her corner of eye cannot be measured even half compared to the physical pleasure through her. It is indeed bigger; better is also implied.

“The glimpse from the corner of her eys, when she sneaks from far
 cannot be measured even compared to closeness; it is indeed more!


இன்றெனது குறள்:

கள்ளமாம் ஓரவிழிப் பார்வையோ காமத்தின்
தெள்ளிதின் மிக்காம் அளவு

kaLLamAm Oravizhip pArvaiyO kAmattin
theLLidin mikkAm aLavu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...