ஏப்ரல் 21, 2015

குறளின் குரல் - 1097


110: (Understanding the signs - குறிப்பறிதல்)

 [This chapter is about knowing the signs of his lady-love and her friend which indirectly convey the different moods, and states for a male; also it talks about how the lady’s friend is able to read the signs shown by the man and his woman bonded in love. Since ladies of assumed to be bashful, it is also assumed to be difficult for them to express themselves through words directly. Since the man in love wants to be with his love in union, this chapter is placed after the previous chapter]

21st April, 2015

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
                        (குறள் 1091: குறிப்பறிதல் அதிகாரம்)

இருநோக்கு - இரண்டுவிதமாக நோக்கும் திறம்
இவள் உண்கண் உள்ளது - இவளுடைய மையிட்ட கண்ணுக்கு உள்ளது
ஒருநோக்கு - ஒரு பார்வையில்
நோய் நோக்கு - அவள் உள்ளத்துக் காமத்தைக் குறிப்புணர்த்தி, என்னில் வேட்கை நோயைத் தரும்
ஒன்று - மற்றொரு பார்வையோ
அந்நோய் மருந்து - அதற்கு வேட்கை நோயைத் தீர்க்கும், அவள் அன்பாய மருந்தாகும்

காதல் வயப்பட்ட பெண்ணுக்கு இருவிதமான பார்வையுண்டாம், காதலன் அறிந்துகொண்ட வகையில். ஒரு பார்வையில், அவள் உள்ளத்துக் காமத்தை குறிப்பால் உணர்த்துவாள்; தானும் விரக வேட்கையெனும் நோயிலகப்பட்டு, காதலனுக்கு  அவ்வேட்கை நோயைத் தருவாள். மற்றொரு பார்வையால் அந்நோயை காதலனுக்குத் தணிவிப்பாளாம் அவள். அவனுக்குத் தணிவிப்பதால் அவளுக்கும் அந்நோய் தணியும் என்பதும் இங்கே குறிப்பால் உணர்த்தப்படுவதே இக்குறளின் அழகு.

மாணிக்கவாசகரின் திருக்கோவையார் பாடலொன்றில், பிணியும் அதற்கு மருந்தும் பிறழப் பிறழமின்னும் பணியும் புரைமருங் குற்பெருந் தோளி படைக்கண்களே”, என்பார். அதாவது, மின்னையும் பாம்பையுமொக்கும் இடையினையும் பெருந்தோளினையும் உடையாளது படைபோலும் கண்கள், பிறழுந்தோறும், பொதுநோக்கத்தாற் பிணியும், உள்ளக் கருத்து வெளிப்படுக்கு நாணோடுகூடிய நோக்கத்தால் அதற்கு மருந்தும் ஆயின என்பார்.

பின்பு வரப்போகும் புணர்ச்சி மகிழ்தல் அதிகாரத்திலும்,  இக்குறளை அடியொற்றி, “பிணிக்கு மருந்து பிறமன் அணி இழை தன்நோய்க்குத் தானே மருந்து”, என்பார் வள்ளுவர்.

Transliteration:

irunOkku ivaLuNkaN uLLadu orunOkku
nOinOkon RannOi marundu

irunOkku – the capability to look at me in two different ways ( a man in love can sense)
ivaL uNkaN uLLadu – is there for eyes looking beautiful with black pigment for the eyelds
orunOkku – in one way of looking
nOi nOkku – she can express her desire for union and can spread her disease of desire
onRu – another way of the same look can be
annOi marundu – a cure for the same disease of desire.

A man in love can sense two different aspects in the eyes of his lady-love; one expressing the disease of union with her mate, simultaneously propagating the same to her man; another that serves as a cure for the same too, to her lover, thus indirectly a cure to herself. The verse beautifully outlines the mental state of a man and woman bonded by love.

Such expressions of love both divine and human are strewn all over literature. A similar thought will be expressed in a later chapter here also a lady with jewels being a cure for her own disease of desire to be physical union with her mate.

Her eyes decorated with black pigment has two looks that are different
 one expressing her disease of desire, another to cure, the same instant”


இன்றெனது குறள்:

மைக்கண்ணாள் கொண்டாள் இருபார்வை ஒன்றுநோ
யைக்காட்டும் மற்றதன் மாற்று

maikkaNNAL koNDAL irupArvai onRunO
yaikkATTum maRRadan mARRu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...