29th
April, 2015
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.
(குறள் 1099:
குறிப்பறிதல் அதிகாரம்)
ஏதிலார் போலப் - ஒருவரை ஒருவர் முன்பின் பார்த்தறியாதவர்போல
பொதுநோக்கு நோக்குதல் - சாதாரணமாகப் பார்த்தல்போல் (உள்ளத்தில்
மகிழ்வை மறைத்து) நடிப்பு
காதலார் கண்ணே உள - ஒருவரை ஒருவர் காதலிக்கும் காதலர்களிடையேதான்
உள்ளது.
ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்தும் பொது இடங்களில் பார்த்துக்
கொள்ளும்போது, முன்பின் அறியாதவர்கள்போல நடித்து நடந்துகொள்வது காதலர்களிடையே காணப்படும்
ஓரியற்கையாம். மற்றவர்களிடம் தம் காதலை மறைத்து, தமக்குள்ளே மறைவாகக் கொண்டாடுவதில்
மகிழ்வது காதலர் உள்ளங்களே!
Transliteration:
EdilAr
pOlap podunOkku nOkkudal
kAdalAr
kaNNE uLa
EdilAr
pOlap – as if they have not seen ever before
podunOkku
nOkkudal – and as if looking like anybody else (hiding
happiness inside)
kAdalAr
kaNNE uLa – such posture is most commonly seen between
lovers.
Though deeply in love, to pretend as if they have
never ever seen each other before and exchange a pretentious glance as if
seeing anybody else is typically the nature of lovers. To hide their love in
the eyes of others and rejoice within themselves is most commonly seen in them.
“To
pretend as if neverever seen each other before
and exchange a common glance is typical of
lovers”
இன்றெனது குறள்:
முன்பின் அறியார்போல் பார்க்கும்
பொதுப்பார்வை
நன்குண்டே காதலர் மாட்டு
munpin aRiyArpOl pArkkum poduppArvai
nanguNDE kAdalar mATTu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam