ஏப்ரல் 27, 2015

குறளின் குரல் - 1103

27th April, 2015

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.
                        (குறள் 1097: குறிப்பறிதல் அதிகாரம்)

செறாஅச் - சினந்தார்போன்று வெளிப்பூச்சாகப் பேசுகின்ற
சிறுசொல்லும் - சுடு சொற்களைச் சொல்லுவதும் (பொய்க்கோபத்தின் வெளிப்பாடே)
செற்றார்போல் நோக்கும் - சினந்தவர்போல பார்க்கின்ற பார்வையும்
உறாஅர்போன்று - தமக்கு உற்றார் இல்லார் போன்ற வெளித்தோற்றமும்
உற்றார் - ஆயினும் உள்ளார்ந்து விரும்பும் உறவும்
குறிப்பு - காதற்பெண்ணை இனங்காட்டும் குறிப்பாகும்

இக்குறள் சொல்லும் கருத்து முந்தைய குறளின் கருத்தை ஒட்டியதே. பொய்க்கோபத்தின் வெளிப்பாடாய், சினந்தார் போன்று வெளிப்பூச்சாகப் பேசுகின்ற சுடு சொற்களைச் சொல்லுவதும், சினந்தவர்போல பார்க்கின்ற பார்வையும், தமக்கு உற்றார் இல்லார் போன்ற வெளித்தோற்றமும், ஆயினும் உள்ளார்ந்து விரும்பும் உறவும் காதற்பெண்ணை இனங்காட்டும் குறிப்பாகும்.

கம்பரின் கவிநயம் இதை, “ஊடிய  மனத்தினர் உறாத நோக்கினார் ஆடவர் உயிரென அருகு போயினார்” என்று சொல்லும்.

Transliteration:

seRAach chiRusollum sERRArpOl nOkkum
uRAaipOnRu uRRAr kuRippu
seRAach – in pretense anger
chiRusollum – speaking hot words
sERRArpOl nOkkum – glancing as if angered, (but not really)
uRAaipOnRu – as if not wanting to belong to her man, externally
uRRAr – but in reality wanting to be with her man
kuRippu – are the signs of the love-struck lady.

Another verse similar to previous one. Speaking outwardly hot words, but implied sweetness, glancing with pretense anger and pretending as if she does not belong to her man, bug wanting him so close yet, are the signs of a lady in love, says VaLLuvar in this verse.

“Speaking hot words but intending sweetness, glancing in anger of pretense
 Desiring closeness yet behaving as if not, are the signs of love so intense”


இன்றெனது குறள்:

சினவாச் சுடுசொல் சினந்தார்போல் பார்வை
மனத்தொளித் தும்காட்டு மன்பு

sinavAch cuDusol sinandArpOl pArvai
manattoLit tumkATTu manbu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...