ஏப்ரல் 24, 2015

குறளின் குரல் - 1100

24th April, 2015

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.
                        (குறள் 1094: குறிப்பறிதல் அதிகாரம்)

யான் நோக்கும் காலை - நான் அவளைப் பார்க்கின்ற போது
நிலன்நோக்கும் - அவள் என்னைப் பார்க்க நாணி தரையைப் பார்ப்பாள்
நோக்காக்கால் - நான் அவளைப் பாராது இருந்தாலோ
தான் நோக்கி மெல்ல - அவள் என்னைப் பார்த்து, அதுவும் பார்த்துவிடுவேனோ என்றுத் தயங்கி
நகும் - என்னைக் கண்டு மகிழ்ந்து புன்சிரிப்பைக் கொள்வாள்.

ஒரு காதலனுக்கும் காதலிக்கும் இடையேயானப் பார்வைப் போரை கம்பன் வருணித்ததை முதலில் பார்ப்போம். இப்பாடலில் இராமனும், சீதையும் ஒருவரை ஒருவர் கண்களால் கவ்விக்கொள்வதை இரசமாக விவரித்திருப்பார்.

“எண்ணரும் நலத்தினால் இணையள் நின்றுழி
கண்ணொடு கண்ணிணை கவ்வி ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்”

வள்ளுவர் இக்குறளில் அதே உணர்வை, காதலன் கூறும் முகமாக, வேறு விதமாக சித்தரிக்கிறார். இருவருக்குமே தெரியும், ஒருவரைப் பார்ப்பது மற்றொருவருக்கு மகிழ்வு என்று. ஆனால் அவன் பார்க்கும் போது, அவள் நாணத்தில் தலை கவிழ்ந்து நிலத்தைப் பார்ப்பாளாம். அவன் பார்க்கிறான் என்று தெரியும் வரையில் தலை நிமிர்ந்து அவனைப் பார்க்கத் தயங்குவாளாம். அவன் பார்க்கவில்லை என்று தெரிய மெல்ல மெல்ல தலையைத் தூக்கிப் பார்த்து அறிந்து கொண்டு, அவனைப் பார்த்து மகிழ்ச்சியால் புன்முறுவல் கொள்வாளாம் காதற்பெண். அக்காட்சியை இக்குறளால் வரைகிறார் வள்ளுவர்.

கி.வா.ஜ-வின் ஆய்வு உரையில் சீவக சிந்தாமணியிலிருந்தும், கலித்தொகையிலிருந்தும்மேற்கோளாக கீழ்காணும் வரிகளைக் காட்டுகிறார்.

நேற்று மேற்கோள் காட்டிய கண்ணதாசன் பாடல், இன்றைய குறளுக்கே முற்றிலும் பொருந்துவதாகவும் அமைவதைக் காணலாம்.

“தன்னையான் முகத்தை நோக்கின்தான் முலை முகத்தை நோக்கும்” (சீவக சிந்தாமணி)
“பல்லூழ் பெயர்ந்தென்னை நோக்குமற் றியானோக்கின் மெல்ல இறைஞ்சுந் தலை” (கலித்தொகை)

Transliteration:

yAnnOkkum kAlai nilannOkkum nOkkAkkAl
tAnnOkki mella nagum

yAnnOkkum kAlai – When I glance her
nilannOkkum – being bashful, she would look at the floor
nOkkAkkAl – When I don’t glance her
tAn nOkki mella – she would raise head, hesitantly, slowly to make sure,
nagum – and be smiling, feeling happy looking at me, Not my not looking at her!

Before we dive into this verse, we should look at what Kamban said in the famous poem which ends with “aNNalum nOkkinAn, avaLum nOkkinAL”., where he describes the eyes of Rama and Seetha meeting for the first time, by describing it as each one is grabbing others’ glance and devour, so beautifully and elegantly.

VaLLuvar conveys the same feeling though in different expression of not glancing at each other known to each other, but having all the desires to do the same. The lovers would know that looking at each other would be extreme elation; but when he looks at her, she would look at the floor, bashfully; She would lift her head hesitantly, slowly to see if he was still glancing him and when sure, she would have a glance at him and be smiling inside with happiness.

The poem of KannadAsan cited in the previous KuraL is more appropriate for todays’ verse.

“She would look at the ground, if I glanced; when I don’t
 Would hesitantly glance at me, have a smile so vibrant “


இன்றெனது குறள்:

பெண்நிலம் நோக்குவாள் நான்பார்க்க பாராக்கால்
கண்பார்த்து உள்மகிழ் வாள்.

peNnilam nOkkuvAL nAnpArkka pArAkkAl
kaNpArttu uLmagizh vAL

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...