ஏப்ரல் 09, 2015

குறளின் குரல் - 1085

9th April,2015

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்.
                        (குறள் 1079: கயமை அதிகாரம்)

உடுப்பதூஉம் உண்பதூஉம் - மற்றவர்கள் நன்றாக உடை உடுப்பதையும், உண்ணுவதையும்
காணின் - (கயவராம் கீழோர்) காணும்போது
பிறர்மேல் - அவர்கள்மீது
வடுக்காண - குற்றம் (இல்லையானாலும்), கண்டு பிடிக்க
வற்றாகும் - வல்லவர்களாக இருப்பர்
கீழ் - கீழோராம் கயவர்.

அசலார் வாழ்ந்தால் அஞ்சு நாட்கள் பட்டினி இருப்பான்” என்று பிறர் வளமாக இருப்பதில் வயிற்றெரிச்சல் கொள்பவர்களைப் பற்றி கூறுவார்கள். வள்ளுவரைப் படிக்கப் படிக்க, நாம் இன்றும் காணும் பல குணக்கேடுகளும் அன்றும் இருந்திருக்கின்றன என்பது தெளிவாகிறது. புராண காலமாகட்டும், மகாபாரதத்து துரியோதனனாகட்டும், இத்தகையவர்களைப் பற்றி படிக்கிறோம். மற்றவர்கள் வாழ்விலே வயிற்றெரிச்சலிலானால், குற்றம் இல்லையென்றாலும் குற்றம் காண வல்ல பொல்லாதவர்களை இன்றும் காணுகிறோம்.  அவர்களையும் கீழோராம் கயவராக அடையாளம் காணுகிறார்.

Transliteration:

uDuppadUum uNbadUum kANin piRarmEl
vAdukkANa vaRRAgum kIzh

uDuppadUum uNbadUum – Others eating and dressing well
kANin – when (the base) sees that
piRarmEl – on them
vAdukkANa – to find blemishes
vaRRAgum – is capable
kIzh – the base person.

Seeing other propsper, some will even go hungry for five days” is a common say, implying that driven by jealousy they would do anything that is like penance to bring harm to such others.  Reading more and more of vaLLuvar, we understand that such bad traits and vile characters were there during his days, which all tend to allude as glorious past. Whether mythological characters or characters from epcis such as Duryodhana, we see repetition of such characters in that glorious past too. When other prosper by eating and dressing well, the base are capable of finding fault with them, says vaLLUvar in this verse.

The “base” is capable of finding fault and blemish,
In others that eat and dress well, just being impish”


இன்றெனது குறள்:

மற்றவர் வாழ்வது காணின் கயவர்கள்
கற்பிப்பர் குற்றமவர் மீது

maRRavar vAzhvadu kANin kayvarkaL
kaRpippar kuRRamavar mIdu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...