ஏப்ரல் 08, 2015

குறளின் குரல் - 1084

8th April,2015

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.
                        (குறள் 1078: கயமை அதிகாரம்)

சொல்லப் பயன்படுவர் - இல்லை என்று முறையிடும் சொல்லை கேட்டவுடன் உதவிடுவர்
சான்றோர் - சான்றாண்மை சிறந்த மேலோர்
கரும்புபோல் - (ஆனால்) கரும்பை ஆலை இயந்திரத்தில் கொடுத்து பிழிவதுபோல்
கொல்லப் பயன்படும் - சக்கையாய் பிழிந்தாலே கொஞ்சமாவது உதவுவர்
கீழ் - கீழோராம் கயவர்

சான்றாண்மை மிக்க மேலோர் ஒருவர் இல்லை என்று வாய் திறந்த மாத்திரத்தில் தம் வள்ளன்மையைக் காட்டிவிடுவர். கீழோராம் கயவர்களோ, கரும்பை ஆலையில் கொடுத்துப் பிழிந்து சக்கை வேறு சாறு வேறாக ஆக்குவதுபோல் செய்தாலே, கொஞ்சமாவது பயன்படுவர்.

இதே கருத்தைக் கூறும் நாலடியார் பாடலொன்று இதோ.

இரவலர் கன்றாக ஈவார்ஆ வாக
விரகிற் சுரப்பதாம் வண்மை;- விரகின்றி
வல்லவர் ஊன்ற வடிஆபோல் வாய்வைத்துக்
கொல்லச் சுரப்பதாங் கீழ்.

இரப்போர் கன்றுகளை போலிருக்க, மகிழ்வுடன் பாலை குறையாதளிப்பதே வள்ளண்மை எனப்படும். கிளர்ச்சியின்றி, கறக்க வல்லவர் தம் விரல்களை அழுத்தி நோவுண்டாக்க அது பொறாது பாலை ஒழுகச்செய்யும் பசுக்களைப்போன்று சூழ்ச்சியுடையார் வருத்தக் கீழ்மக்கள் அதனால் தம் பொருளைத் கொடுப்பர், என்று வேறு ஒரு எடுத்துக்காட்டால் வள்ளுவர் கூறுவதையே இந்த நாலடியார் பாடல் கூறுகிறது.

நாலடியார் கயமை அதிகாரத்தில் காணப்படும் மற்றொரு பாடலும், கயவர் எப்போது உதவுவர் என்று அழகாகக் கூறுகிறது.

தளிர்மேலே நிற்பினும் தட்டாமற் செல்லா
உளிநீராம் மாதோ கயவர்; - அளிநீரார்க்கு
என்னானுஞ் செய்யார் எனைத்தானும் செய்பவே
இன்னாங்கு செய்வார்ப் பெறின்.

தளிர்மேலே நின்றாலும் ஒருவர் சுத்தியல் கொண்டு தட்டினாலன்றி, அத்தளிரைத் துளைக்காத உளி போல்வர் கயவர். அவர்கள் கருணை இயல்புடையார்க்கு ஓர் உதவியும் செய்யார்; தம்மைத் தாக்கித் துன்புறுத்துவார்க்கு எல்லா உதவிகளையும் செய்வர் என்பதே இப்பாடல் சொல்லும் கருத்து.
இப்பாடல்களல், “அடி உதவுவது போல அண்ணன் தம்பிகூட உதவார்” என்பது கயவராம் கீழோருக்கும் பொருந்துவதுபோல் தோன்றுகிறது.

Transliteration:

Sollap payanpaDuvar sAnROr karumbupOl
Kollap payanpaDum kIzh

Sollap payanpaDuvar – Will extend help, the moment they hear a word of seeking
sAnROr – the noble
karumbupOl – but like the sugarcane
Kollap payanpaDum – only when squeezed to pulp, yield anything, be useful
kIzh – the base.

Noble will extend their help the moment they hear the word of seeking from anyone. Contrary to that, the base will yield only when squeezed to pulp like sugarcane, says this verse. Though the usefulness extracted from base is likened to the sugarcane juice in this verse, the comparison is not right, for sugarcane is inherently sweet. However, the hardness of sugarcane, compared to other plants is probably taken here as the reason for comparison.

Couple of nAlaDiyAr verses on the same topic have given different comparisons of extracting milk from a cow by inducing pain, instead of showing a calf as well as a chisel which only when hit, can penetrate anything.

The popular adage of “not even brothers can help like how beating does” seems to be appropriate in this context also.

“The moment the word help is heard, shall help the noble
 But only by squeezing like sugarcane, shall yield, ignoble”


இன்றெனது குறள்:

உதவுவர் சொன்னதும் மேலோர் கரும்பை
அதம்செய்தற் போல்செய்தால் கீழ்

uthavuvar sonnadum mElOr karumbai
adamseidaR pOlseidAl kIzh

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...