4th
April,2015
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.
(குறள் 1074:
கயமை அதிகாரம்)
அகப்பட்டி - தம்முடைய அகமாகிய திரிகின்ற
நாய்போன்று
ஆவாரைக் காணின் - ஆகிவிடுவாரைக் கண்டால்
அவரின் மிகப்பட்டுச் - தாமே ஏதோ அவரினும் மேலோர் என்று
செம்மாக்கும் கீழ் - இறுமாப்பு அடைவர் கயவர்கள்
பொருட்பாலின் இந்த இறுதி
அதிகாரத்தை எழுதும்போது வள்ளுவரின் நையாண்டி சிறிது உச்சத்தில் இருந்திருக்கவேண்டும். உள்ளளவில் திரிகின்ற நாயைப் போல் ஆகிவிடுகின்ற பிறரைக்
கண்டால், கீழோராம் கயவர்கள், தாமே அவரினும்
மேலோர் என்று இறுமாப்பு அடைவார்கள், ஈயத்தைப் பார்த்து இளித்த பித்தளைப் போன்று, என்கிறார்
இக்குறளில். அதாவது தன்னிலும், கீழோர் ஒருவர் இருக்கிறாரே என்று மகிழ்வதுபோல! அவர்களுக்கு
தங்களைத் திருத்திக்கொள்ளத் தோன்றுமா? தாம் அந்த அளவுக்கு மோசமில்லை என்று நினைந்து
தாம் சென்றவழியிலேயே சென்று மேலும் கயமைத்தனத்தில்தான் ஈடுபடுவர்.
Transliteration:
agappaTTi
AvAraik kANin avarin
migappaTTuch
chemmAkkum kIzh
agappaTTi –
mind that wanders like a dog
AvAraik
kANin – when they (base) see such people (baser)
Avarin
migappaTTuch – as if they are higher in stature and character
chemmAkkum
kIzh – base will be proud.
By the time,
vALLuvar wrote this last chapter of Section on “Wealth”, he must have developed
a sense of sarcasm, which is evident in this verse too. Base, when they see others
that wander in their minds, as dogs, indeed feel happy and proud that they are
better than such baser people or there are baser people compared to them. If
such a thought sprang in a person, would he mend self? Would only be satisfied
that he is not worse off and would tend to go the already treaded path only.
“Seeing baser than self, whose mind
wanders like a dog,
A
base would feel better and proud, blinded by that fog”
இன்றெனது குறள்:
தம்மிலும் கீழாய் திரிவோரைக்
காணின்கீழ்
தம்மை உயர்வாயெண் ணும்
thammilum kIzhAi thirivOraik kANinkIzh
thammai uyarvAyeN Num
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam