20th
March, 2015
ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை.
(குறள் 1059:
இரவு அதிகாரம்)
ஈவார் கண் - ஈந்துவக்கும் ஈகையாளர்க்கு
என்னுண்டாம் - எவ்வாறு கிடைக்கும்?
தோற்றம் - புகழ்
இரந்து கோள் மேவார் - யாசித்து அவரிடம் செல்வோர்
இலாஅக் கடை - இல்லாது போயின்
உலகில் இரப்பாரே இல்லையென்றால்
ஈவார்க்கு புண்ணியம் சேர்ப்பதற்கும், புகழ் அடைவதற்கும் என்னவாம் வழி? சென்ற குறளின்
கருத்தை ஒட்டியதே இக்குறளும். கேள்வி மூலமாக பதிலையும் சொல்லி விடுகிறார் வள்ளுவர்.
இரந்து கொள்வார் சென்று இரக்கவில்லையாயின் ஈவார் என்பார்க்கு புகழுக்கு யாதொரு வழியுமில்லை.
Transliteration:
IvArkaN ennunDAm thORRam irandukOL
mEvAr ilAak kaDai
IvAr kaN – For benovolent hearts
ennunDAm – how will they have?
thORRam – praise and fame?
irandu kOL mEvAr – persons to go to them seeking alms
ilAak kaDai – if there is none
If there is none to
seek alms, or help, how would benovolent hearts have any fame or glory? – A
verse along the same thought line of the earlier verse. By asking this question,
vaLLuvar hints at the obvious answer, that there indeed is none!
“How would benovelent hearts gain any fame
If
none to go and seek alms from the same?”
இன்றெனது
குறள்:
இரப்போர் இலையாயின் ஈவார்க்கெவ் வாறாம்
புரப்போர்க் குளதாம் புகழ்
irappOr ilaiyAyin IvArkkev vARAm
purappOrk kuLadAm pugazh
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam